புலிகளின் கொடியை ஏற்ற இங்கிலாந்து அரசு எப்படி அனுமதிக்கும்! சரத்வீரசேகர கேள்வி!

கடந்த மே18 அன்று இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது  விடுதலை புலிகளது ஆதரவாளர்கள் புலி கொடிகளை ஏந்தியவாறு, ஈழ கீதத்தை இசைத்துள்ளனர்.

இவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? என அமைச்ச சரத்வீரசேகர தனது ட்விட்டர் பக்கம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகள் இயக்கமானது இங்கிலாந்து அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது.

பொது மக்களை நினைவுகூறுவது எனும் போர்வையில் பயங்கரவாத அமைப்பினது சின்னங்கள் காட்சி படுத்துவதனை எவ்வாறு  அனுமதிக்கலாம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version