எதிர்வருகின்ற 07ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பயணத்தடையானது 14ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்ததாவது
ஜீன்14வரை பயண தடையினை நீடிப்பது தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மீளாய்வு கூட்டத்தின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் அரசினது அறிவிப்புக்களை அவதானிப்பதன் ஊடாக உண்மை தன்மையினை அறிந்துகொள்ள முடியும் என்றார்.
தற்போது நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகையை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது எதிர்வரும் ஜீன் 7ம்திகதி அதிகாலை 4மணிக்கு தளர்த்த படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சமூக வலைத்தளங்களில் தற்போது ஜீன்14ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வினவினோம். இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.