நிரந்தர தொழில் வாய்ப்பின்றி அன்றாடத் தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு மீளவும் 5ஆயிரம் கொடுப்பனவை வழங்க அரசு தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணிகள் பூர்தியடைந்து விட்டது.
இக்கொடுப்பனவானது நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தினை பெற்றுகொள்ளும் மக்களுக்கு மீளவும் வழங்கப்படவுள்ளது.
கொரோனா பரவலின் இப்போதைய நிலைமையினை கருத்தில் எடுத்து நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினை அடுத்தே குறைந்த வருமானத்தினை பெறும் குடும்பங்களிற்கு 5ஆயிரம் கொடுப்பனவு வழங்க தீர்ர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இம்முறை இதனை எவ்வளவு மக்களுக்கு வழங்குவது தொடர்பாக இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இக்கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்தினுள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.