பணி பகிஷ்கரிப்புக்கு தயாராகும் தாதியர் சங்கம்!

தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்வரும் 1ம்திகதி அடையாள பணி பகிஷ்கரிப்பு செய்வதற்கு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இம்மாத 31ம் திகதிக்கு முன்னர் அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

1. தாதிய உத்தியோகத்தரது குடும்பத்திற்கும் ஏனைய சுகாதார துறையினரது குடும்பத்திற்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றல்.
2. தாதியருக்கும் 5000ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்.
3. புதிதாக இணைத்த 4000 தாதிய உத்தியோகத்தருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றல்.
4. கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல்.
5. கோவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல்.
6. பயணத்தடை காலத்தில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
7. கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் மற்றும் சுகாதார சார் நிறுவனங்களிலும் பணி புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு N95 முகக் கவசம் மற்றும் உரிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும்.

தமது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் ஜீன் 1 ஆம் திகதி ஒருமணித்தியால அடையாள பகிஷ்கரிப்பை நண்பகல் 12.00 முதல் 1.00 மணிவரை செய்ய தீர்மானம் எடுத்துள்ளது.

Exit mobile version