இலங்கையில் மீளவும் பயங்கரவாத தாக்குதல்! மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு!
இலங்கையில் மீளவும் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடாத்தப்பட உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்றைய தினம் எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தது.
குறித்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு இலங்கைக்கு எவ்விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாவது
அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் பொதுவாக வழங்கப்படும் பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு 4ம்நிலை பயண எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெரும் தொற்று காரணமாகவே அமெரிக்காவினால் இவ்வாறான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்ற போதிலும் இவ்எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் பொதுவாகவே உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கை குறித்து 3ம்நிலை தொடக்கம் 4ம் நிலை வரையிலான பயண ஆலோசனை வழங்கபட்டுள்ளமை ஆனது கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தற்போதுவரை எந்த அறிக்கையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.