ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய புத்தளம் நகரசபையின் தவிசாளருமான K.A.பாயிஸ் விபத்து ஒன்றில் மரணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து வண்ணாத்துவில்லு பகுதியில் அமைந்துள்ள தனது தோட்ட காணிபிரதேசத்துக்கு சென்று திரும்பும் போது வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்துள்ளார்.
காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.