குணங்கள்

நமது புறத்தோற்றம் பிறருக்கு ஒருவித கவர்ச்சியை உருவாக்கி நம்முடன் உறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. அவர்கள் நம்மை மதிப்பிட உதவுகிறது. நாம் சிறந்த விதமாகக் காட்சியளித்தாலும் கூட நமது குணங்களை வெளிப்படுத்துவது நம் மனமே யாகும். அதுவே நமது நடத்தைக் குணங்களை உருவாக்கு கிறது.

நாம் அனைவருமே பலவிதமான குணங்களை உடையவர்கள். மனித குணங்களைப் பொதுவாக நான்கு வகைகளாகக் கூறுவார்கள். கோபம், சாந்தம், தைரியம் மற்றும் பயம் ஆகிய நான்கு வகைகளுடன்தான் நாம் நடந்து கொள்கிறோம். எனினும் ஒருவர் மிக அதிக அளவில் வெளிப்படுத்தி நடந்து கொள்ளும் விதத்திலிருந்து அவரை ஒரு குறிப்பிட்ட வகைக் குணமுடைய வராக மதிப்பிடுவர்.

நமது நடத்தை நம் குணத்தை வெளிப்படுத்துகிறது. அது வாழ்வில் முன்னேறுவதற்கு உதவி புரிய வேண்டும். நமக்கு எதிரியாக மாறி நம்மை முன்னேற விடாமல் தடுத்துவிடக் கூடாது. கோபமும் பயமும் நமது வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடைகளாக மாறக் கூடியவை. தைரியமும் சாந்தமும் நமது முன்னேற்றத்திற்கு உதவி புரியக்கூடியவை. எனவே, நாம் எந்த வகைக் குணத்தை உடையவர் என அறிந்து கொள்ள வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய குணங்களை மேற் கொள்ள பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும்.

1 எளிதில் எரிச்சல் அடைகிறீர்களா?
2. அனைவரும் உங்கள் கட்டளைப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
3. அவர்கள் அது போன்று நடக்காவிடில் வெகுண்டெழுகிறீர்களா?
4. முரட்டுத்தனமாக நடந்து கொள்பவரா?
5. ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்பவரா?
6. எளிதில் உணர்ச்சி வசப்படுவரா?
7. எளிதில் நிதானமிழப்பவரா?
8. பிறருடன் விவாதம் புரிய வேண்டும் என்று நினைப்பவரா?
9. பிறருடன் சண்டையிட வேண்டும் என எண்ணுபவரா?
10. சிடுசிடுப்புடன் நடந்து கொள்பவரா?
11. பிறர் உங்கள் பேச்சைக் கேட்காவிடில் உரத்துக் கூக்குரலிடுபவரா?
12. பிறரை அவமதித்துப் பேசுவதில் ஆனந்தம் அடைபவரா?
13. பிறர் மனம் புண்படும்படியாக சூடான வார்த்தைகளைப் பேசுபவரா?
14. பிடிவாதமாக நடந்து கொள்பவரா?
15. பிறரை அடக்கி அதிகாரத்துடன் நடந்து கொள்ள விரும்புவரா?

மேற்கூறியவைகள் கோப குணத்தின் சில அறிகுறிகளாகும். அவைகளுக்கு ‘ஆம்’ என பதில் கூறியிருந்தால் முன் கோபமுள்ள குணமுடையவர் என அறியலாம்.
முன்கோப குணம் நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எதிரி யாகையால் அதனைத் தவிர்த்துவிட முயற்சிக்க வேண்டும். கோபம் நண்பர்களையும் எதிரியாக்கி விடுகிறது.
உடல் உபாதைகள் அதிக கோபத்தைத் தூண்டி விடுகின்றன. உணவில் காரமும் உப்பும் மற்றும் அதிக இரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் உபாதைகள் அதிக கோபத்தைத் தூன்டி விடுகின்றன.
உணவில் காரமும் உப்பும் மற்றும் அதிக கொழுப்புச் சத்தும் கலந்து தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிக கோபம் ஏற்படுகிறது.
இந்தக் குறைகளை மருத்துவ ரீதியாக நிவர்த்தி செய்து கொண்டு விடலாம். மன ஒருமைப்பாட்டுப் பயிற்சியும் தியானமும் கோபத்தைக் குறைத்துக் கொள்ள உதவியளிக்கின்றன.

பயிற்சி : 4

1. அனைவருடனும் சகஜமாகப் பழகத் தயங்குகிறீர்களா?
2. அதிக அளவில் மனக்குழப்பம் அடைகிறீர்களா?
3. பிறர் குறை கூறுவார்கள் என்ற அச்சத்துடன் தனிமையை நாடுகிறீர்களா?
4. எளிதில் பதட்டமடைகிறீர்களா?
5. அதிகமாகக் கற்பனை புரிபவரா?
6. எப்பொழுதும் கவலையுடன் காணப்படுபவரா?
7. எப்பொழுதும் சோர்வுற்றவராக் காணப்படுகிறீர்களா?
8. சிறு விஷயத்தைப் பெரிதாக நினைத்து நடுங்குபவரா?
9. அதிக அளவு டென்ஷன் அடைபவரா?
10. நிம்மதியற்றவராகக் காணப்படுபவரா?
11. மனக் கவலையால் எதையும் செய்யத் தயங்குபவரா?
12. தன்மீது சுய அனுதாபம் கொண்டுள்ளவரா?
13. சதா காலமும் விரக்தியடைந்து காணப்படுபவரா?
15. அதிக அளவில் சந்தேகப் படுபவரா?
மேற்கூறியுள்ளவை பயந்த குணத்தின் சில அறி குறிகள். இவைகளுக்கு ‘ஆம்’ என பதில் அளித்திருந்தால் பயந்த குண ஆதிக்கம் மிகுந்தவர் என அறியலாம். பயத்தைப் போக்க தன்னம்பிக்கை பெற வேண்டும். தியானம். மன ஒருமைப்பாடுமுறை போன்ற பயிற்சிகள் உதவியளிக்கும். உடல் மன மருத்துவ உதவியுடன் பயந்த குணத்தின் ஆதிக்கத்தை விரட்டிவிட இயலும்.

Exit mobile version