நம்மை அறிவோம்
சுய முன்னேற்றம் அடைய தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகும். சுய ஆராய்வு ஒருவரது பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துக் காட்டுகிறது. பலவீனங்களை ஒழித்துவிடவும் பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளவும் உதவுகிறது.
உடல் ஆரோக்கியம்
வாழ்வில் முன்னேற்றம் காண நமது மனம் மட்டும் வேகமாகச் சிந்தித்தால் போதாது. நமது சிந்தனைகள் செயலாக மாறுவதற்கு உடலும் ஒத்துழைக்க வேண்டும். நம் மனமும் உடலும் இணைந்து பணிபுரிய உடலில் தேவையான அளவு சக்தி பெற வேண்டும். நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் போது நமக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறோம். எனவே, உடல் ஆரோக்கியம் என்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாக அமைவதால் அதனை அறிந்து கொள்ளவேண்டும்.
பயிற்சி :1
கீழே உள்ள கேள்விகளை வாசித்து ஆம் / இல்லை என மனதிற்குள் சொல்லி பாருங்கள்.
1 எப்பொழுதும் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடிகிறதா?
2. சோர்வில்லாமல் காணப்படுகிறீர்களா?
3. தினமும் இரவில் குறைந்தது 8 மணி நேரம் உறங்க முடிகிறதா?
4. தூக்கத்தின் நடுவில் விழிப்பு ஏற்படாமல் தொடர்ந்து உறங்குகிறீர்களா?
5. காலையில் எழும்போது உடல் அசதியின்றிக் காணப்படுகிறதா?
6. தினமும் நேரம் தவறாமல் சரியான சமயத்தில் உணவு உட்கொள்கிறீர்களா?
7. பசியின்மை அல்லது அஜீரணம் போன்ற உபாதைகளின்றிக் காணப்படுகிறீர்களா?
8. சரிவிகித சத்துணவு உண்கிறீர்களா?
9. பெரிய வியாதிகள் இல்லாமல் வாழ்கிறீர்களா?
10. உங்களது எடை உங்கள் வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்றவாறு உள்ளதா?
11. அதிக டென்ஷன் அடையாமல் உள்ளீர்களா?
12. ஏதாவது பிரச்சனை தோன்றினால் மனதை குழப்பிக் கொள்ளாமல் தீர்வு காணும் இயல்புடையவரா?
13. எளிதில் உணர்ச்சிவசப்படாமல் நடந்து கொள்கிறீர்களா?
14. பதட்டம் அடையாமல் அமைதியாகச் சிந்திப்பீர்களா?
15. மனம் சோர்வடையாமல் இயங்க முடிகிறதா?16. சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா?
17. புகையிலை சுவைக்கும் பழக்கம் இல்லாதவரா?
18. மது அருந்தும் பழக்கம் இல்லாதவரா?
19. உடற்பயிற்சி செய்வதுண்டா?
20. உடலுக்கும் மனதிற்கும் போதுமான அளவு ஓய்வு அளிக்கிறீர்களா?
மேற்கூறிய கேள்விகளுக்கு ‘ஆம்’ என விடையளித் திருந்தால் உங்களுக்கு பொதுவான உடல் ஆரோக்கியம் உள்ளதென அறிந்து கொள்ளலாம். அதிக அளவில் இல்லையென பதிலளித்திருப்பின் உடல் ஆரோக்கியம் குன்றியுள்ளது என அறியலாம். உடனே மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் உடல் ஆரோக் கியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.