இந்திய பெண்மணிகள் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள்!

155. இந்த இந்தியாவின் புனித மண்ணில் தான், சீதை சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களிடம்தான் சேவை மனப் பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பணிவு ஆகிய பண்புகளைக் காண முடியும்.
இப்படி உலகில் வேறு எங்குமே பார்க்க முடியவில்லை. மேலைநாட்டுப் பெண்களைப் பார்த்தால் பல சமயங்களில் பெண்களாகவே தெரியவில்லை , அவர்கள் முழுக்க முழுக்க ஆண்களின் நகல் போலவே இருக்கிறார்கள்.

156. பெண்ணுக்கு உரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களையுடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை! ஐயோ! அறிவு ஒளியை அவர்களிடம் பாய்ச்ச நீங்கள் முயல்வதே இல்லை.
அவர்களுக்கு மட்டும் சரியான கல்வி கொடுக்கப்படுமானால் அவர்கள் உலகத்திற்கே மிகச் சிறந்த லட்சியப் பெண்களாக உருவெடுப்பார்கள்.

157, ‘எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார் களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியடை கின்றன.
எங்கே அவர்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கே எல்லாக் காரியங்களும் முயற்சிகளும் நாசமாகின்றன’ என்று மனு கூறுகிறார்.
எந்த நாட்டில், குடும்பத்தில் பெண்களுக்கு மேன்மையான இடம் இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை.
எனவே இந்தக் காரணங்களால் நமது நாட்டுப் பெண்கள் முதலில் உயர்வு பெற வேண்டும்.

158. மங்கையரின் நிலைமை வளர்ச்சியடைந் தாலன்றி உலகம் நலம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
பறவை ஒரே ஒரு சிறகைக்கொண்டு பறப்பது என்பது இயலாத காரியம். சமுதாயம் என்ற பறவைக்கு ஆண், பெண் ஆகியோர் இருவரும் இரண்டு சிறகுகள் போன்றவர் ஆவர்.

159. இந்த நாட்டின் ஆண்மக்களுக்கு நான் சொல்வதையே பெண்மணிகளுக்கும் கூறு வேன்.
இந்தியாவிலும் இந்தியத் தர்மத்திலும் நம்பிக்கை வை
வாகை வையுங்கள். பலசாலிகளாகவும பங்காலத்தில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருங்கள்.

Tamilsk.com

160. ஆன்மிகத்தை மையமாகக் கொண்டே பெண் கல்வியைப் பரப்ப வேண்டும்.
மற்றத் துறைகளில் அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் ஆன்மிகப் பயிற்சிக்கு அடுத்தபடியாகவே இருக்க வேண்டும்.
ஆன்மிகப் பயிற்சி, நற்குணங்களைப் பெறுதல், பிரம்மசரிய விரதம் காத்தல் ஆகியவற்றை மிகவும் சிரத்தையுடன் கவனித்து, ஆவன செய்ய வேண்டும்.

161. நல்லது எதற்கும், தூயது எதற்கும், புனிதமானது எதற்கும், பெண்மையின் மேன்மையான பண்புகள் அனைத்துக்கும் இந்தியாவில் சீதையின் பெயர் சிறந்த ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

162. ‘சீதையைப் போல் வாழ்வாயாக’ என்று நம் நாட்டுப் பெரியோர்கள் பெண்களை வாழ்த்துவது வழக்கம்.

163. இந்தியப் பெண்மணிகள் சீதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே வளர்ந்து வளம் பெற வேண்டும்.
முன்னேறுவதற்கு இதைத் தவிர வேறு வழியே கிடையாது.

164. சமயம், கலைகள், சுகாதாரம் இப் படிப்பட்ட எளிமையான பாடங்களை நமது பெண்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
நாவல்களையோ கற்பனைக் கதைகளையே அவர்களைப் படிக்க அனுமதிப்பது நல்லதல்ல.

165, மற்றவற்றுடன், அவர்கள் வீரமும் வலி மையும் கொண்டிருக்க வேண்டும்.
இந்நாளில் அவர்கள் தற்காப்பு முறைகள் தெரிந்து கொள் வதும் அவசியமாகிவிட்டது.

166. வெறும் வழிபாடுகளை மட்டும் சொல்லித் தருவது போதாது.
அவர்கள் பெறும் கல்வி எல்லா விஷயங்களிலும் அவர்களின் கண்களைத் திறப்பதாக அமைய வேண்டும்.
பக்தி, சுயநலமின்மை போன்ற குணங்களை இந்தப் பெண்களின் மனதில் பதிய வைப்ப தற்கு இலட்சியமயமான பெண்களை உதாரணம் காட்ட வேண்டும்.
சீதை, சாவித்திரி, தமயந்தி, லீலாவதி, கானா, மீரா முதலிய உன்னதமானவர்களின் வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
இந்தப் புனித மான பெண்களின் வாழ்க்கையால் உணர்வும் உற்சாகமும் பெற்று தங்கள் வாழ்க்கையை அவர்களும் அதேபோல உருவாக்கிக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

Tamilsk.com

167. நீங்கள் எப்போதும் பெண்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், சொல்லுங்கள்.
மாதர்களுக்கு உரிய சரியான மதிப்பை சிப்பதன் மூலமே எல்லா நாடுகளும் சிறப் சத்தியிருக்கின்றன.
எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையோ, எந்தச் சமுதாயம் பெண்களை மேன்மைப்படுத்த வில்லையோ அந்த நாடும் சமுதாயமும் எப் போதும் உயர்வடைந்ததில்லை;
இனிமேலும் எதிர்காலத்தில் உயர்வடையப் போவதில்லை.
ஜகன்மாதாவின் உயிருள்ள வடிவங்களாகத் திகழும் பெண்கள் உயர்வடையச் செய்தாலன்றி, நீங்கள் உயர்வு பெறுவதற்கு வேறு வழி இருக்கிறதென்று நினைக்கவே வேண் டாம்.
பெண்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான பிரச்சினைகள் பல உண்டு என்பதில் சந்தேகமில்லை .
ஆனால் ‘கல்வி’ என்னும் மந்திரத்தினால் தீர்த்துவைக்க முடியாத பிரச்சினை அவற்றில் எதுவுமே இல்லை.

168. மாதர் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளும் நிலையில் வைக் கப்பட வேண்டும்.
மாதர்களின் பிரச்சினை களைத் தீர்த்து வைப்பதற்கு நீ யார்? நீ என்ன, அவர்களைப் படைத்த ஆண்டவனா?
கையைக் கழுவிக்கொண்டு விலகி நில், அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்வார்கள்.

169. ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிகளைத் திறக்கம் சொல்கிறேன்.
பெண்களின் நிலை உயர்க்க பட்டால் அவர்களுடைய குழந்தைகள் மேலான செயல்களைச் செய்து நாட்டின் பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
அப்போது தான் பண்பாடு, கல்வி ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.

170. மேற்கூறிய முறையில் நம் நாட்டு மாதர்களின் வாழ்க்கையை உருவாக்கினால் தான் சீதை, சாவித்திரி, கார்க்கி போன்ற இலட்சியப் பெண்மணிகள் மீண்டும் இங்கே தோன்றுவார்கள்.

விவேகானந்தர் சொன்ன ஏனைய தத்துவங்கள்

புதிய இந்தியாவை படைப்போம்!

கல்வியின் அவசியம் பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவங்கள்!

பொறாமை கூடாது விவேகானந்தரின் பொன்மொழிகள்!

ஆன்மிகம் பற்றிய விவேகானந்தரின் தத்துவங்கள்!

Exit mobile version