கல்வியின் அவசியம் பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவங்கள்!

148. கல்வி, கல்வி, கல்வி- இது ஒன்றே இப்போது நமக்குத் தேவை.
ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன்.
அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்;
இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.

149. பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி,
உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கங்கள் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி,
அதைக் கல்வி என்று சாலவது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.

150, சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனை வருக்கும் உண்மைக் கல்வியை அளிப்பதே நமது கடமை.
அந்தக் கல்வி மூலமாக அவர்கள் தங்களுக்கு நல்லது எது, கெட்டது என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் கெட்டதை நீக்கி விடுவார்கள்.
அதன் பிறக சமுதாயத்தில் வலிந்து ஒன்றை நிறுவவோ எதையும் அழிக்கவோ வேண்டியதில்லை.

151. தாழ்ந்த மக்களுக்குப் பண்பாட்டையும் கல்வியையும் அளித்து அவர்களை அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்.
அவர்கள் விழித்து எழுந்தால் – நிச்சயம் ஒரு நாள் விழித்து எழத்தான் போகிறார்கள் அப் போது நீங்கள் அவர்களுக்குச் செய்த நல்ல சேவையை மறக்காமல் எப்போதும் நன்றி யுள்ளவர்களாக இருப்பார்கள்.

152. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறி வாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
நாம் மீண்டும் உயர்வடைய வேண்டுமா னால், பொதுமக்கள் எல்லோருக்கும் கல்வியைப் பரப்பியாக வேண்டும்.
பொதுமக்களுக் குக் கல்வியைத் தந்து அவர்களை உயர்த்தி விடுங்கள்.
இது ஒன்றே ஒன்றுதான் நமது சிறப் பைப் பெறுவதற்கு உரிய ஒரே ஒரு வழியாகும்.

153. துக்கம் என்பது அறியாமை காரண மாகத்தான் ஏற்படுகிறது.
வேறு எதனாலும் அல்ல என்பதை, பட்டப்பகல் வெளிச்சம் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன்.

154. எனவே நாம் அமைக்கும் கல்வி, நாடு பலகற்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக, ஆன்மிகத்தைக் கொண்டதாகவும் உலக நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும் தேசீயப் பண்பாட்டிற்கு ஏற்றதாகவும்ம், வாழ்க்கையில் கடைப்பிடிக்கக்கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருப்பது அவசியம்.

Exit mobile version