136. நம் நாட்டு மக்கள் தன்னம்பிக்கை இழந்து வாழத் தொடங்கிய பிறகுதான், வீழ்ச்சி யும் குறையும் ஏற்பட ஆரம்பித்தன.
137. நான் உலகம் முழுவதும் சுற்றியிருக் கிறேன். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய நாட்டு மக்கள் செய லற்ற தன்மையில் பெரிதும் அழுந்திக் கிடக் கிறார்கள். வெளியிலே சாத்விகத் தோற்றம்; ஆனால் உள்ளே பார்த்தாலோ கல்லைப் போன்ற, கட்டை போன்ற செயலற்ற தன்மையே இருக்கிறது.
138. இந்தியா வீழ்ச்சியடைந்ததற்கு அதன் குறுகிய புத்தியும் செயல்முறையுமே கார மாகும். பண்டைய பெருமையை இந்தியா இழந்திருப்பதற்கு இவையே காரணம். இந்தக் குறுகிய புத்தியை வேரோடு களையாதவரை பில் ஒரு போதும் இந்தியா மேன்மை அடை
139. நாமும் ஒன்றும் செய்வதில்லை ; ஏதா வது செய்பவரையும் எள்ளி நகையாடி ஏளனம் செய்வோம். நம் நாட்டவர்கள் வீழ்ச்சியுற்ற தற்கு, நாசகரமான இந்தக் குறைபாடே காரணம்.
140. செருக்கினாலும் அரசியல் அதிகாரத்தின் விளைவாகவும் நம் நாட்டுக் கல்வியும் அறிவும் ஒரு சிலரிடமே குவிந்து போயின. நமது நாட்டின் அழிவுக்கு இதுவும் ஒரு காரணம்.
141. பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக் கியதுதான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
142. இந்துக்கள் தங்களுடைய கடந்தகால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும்.
யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமை களை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.
இந்தியாவின் வீழ்ச்சி, பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டு விடவில்லை . மாறாக, அவற்றுக்கு உரிய நியாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
143. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல.
மதத்தை முறையாகப் பின்பற்றாமற்போனது தான் சமுதாயத்தின் இப்போதைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.
இந்த உண்மையை நான் சொல்கிறேன். இந்த உண்மையை நான் நமது பழைய நூல்களிலிருந்து ஆதாரம் காட்டி மெய்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்.
ஆம், நான் சொல்லும் ஒவ் வொரு வார்த்தையையும் என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்.
Tamilsk.com
141. நமது தேசம் குடிசையில் இருக்கிறது என்பதை நினைவுகூருங்கள். ஆனால், அந்தோ! அந்தக் குடிசைகளில் வாழும் மக்களுக்கு எவரும் எதுவும் செய்தாரில்லையே
145. இந்திய மக்கள் தாழ்வுற்று ஏழைகளா இருப்பதை நினைக்கும்போது, என் உள்ள எவ்வளவு வேதனைப்படுகிறது தெரியுமா அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இல்லை; தப்ப வழி இல்லை ; அவர்களால் உயர்வடைய இயலவில்லை .)
146. பிறர் உதவியையே நாடி இருக்கும் ஒரு குழந்தையைப் போல, நமது தேசீய இயல்பு முழுதும் அமைந்துள்ளது. சாப்பாட்டை வாய் அருகே கொண்டு போய் வைத்தால், அதைச் சாப்பிட அனைவரும் தயாராக இருக்கிறார்கள். சாப்பாட்டை ஊட்ட வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகின்றனர்.
சுய உதவி செய்து கொள்ளத் தெரியாதவர்கள் வாழத் தகுதி யற்றவர்கள்.
147. நமது இழிந்த நிலைமைக்கும் வறுமைக் கும் காரணம் நாமேயன்றி, ஆங்கிலேயர் காரணம் அல்ல என்று ஒவ்வொரு தடவையும் என் இதயம் கூறுகிறது.
நமது மேல் சாதி மக்கள் அகம்பாவத்தோடு ஏழை எளிய மக்களைத் தங்கள் காலடியில் போட்டுத் துவைத்து மிதித்து, மனித உணர்வு அறவே அற்றுப் போகும்படி அவர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்.
அதுதான் நமது இழிந்தநிலைக்குக் காரணமே தவிர, ஆங்கிலேயர் காரணம் அல்ல என்பது நிச்சயம்.