பொறாமை கூடாது விவேகானந்தரின் பொன்மொழிகள்!

129. அடிமைகள் எல்லாருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையேயாகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

130. காலங்காலமாக நாம் பயங்கா பொறாமையால் நீர்த்துப் போயிருக்கிறோ எப்போதும் மற்றவர்கள் மீது பொறாமைப் பட்டபடியே இருக்கிறோம்.
‘இந்த மனித னுக்கு என்ன அதிக முக்கியத்துவம்? எனக்கு ஏன் இல்லை?’ என்றே எப்போதும் நினைக் கிறோம்.

131. பொறாமையையும் ஆணவத்தையும் விட்டு விடு. பிறருக்காகக் கூடி உழைக்கக் கற்றுக்கொள். நமது நாட்டிற்கு மிகவும் தேவையானது இதுவே.

132. இந்தியாவில் மூன்று பேர் ஓர் ஐந்து நிமிடத்திற்கு ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட முடிவதில்லை.
ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டியிடுகிறார்கள்.
இதனால் நாளடைவில் அந்த இயக்கமே அழிந்து போகும் நிலைக்கு ஆளாகிவிடுகிறது.
கடவுளே! பொறாமைப்படாமலிருக்க நாங்கள் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோமோ!

133. ஓர் அடிமையின் நெற்றியில் இயற்கை எப்போதும் இடும் குறியாகிய பொறாமை என்ற மாசைத் துடைத்து விடுவோமாக.
ஒருவரிடமும் பொறாமை கொள்ளாதே.

134. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும்.
வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் கடுத்து நிறுத்த முடியாது.
ஒரு முறை நீ அவற்றை இயங்கும்படி செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆக வேண்டும்.
இதை நீ நினைவில் வைத்துக் கொண்டால் தீய செயல்களைச் செய்வதி லிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.

135. முதலில் நாம் வழிபட வேண்டிய தெய்வங்கள் நமது தேசமக்களேயாவர்.
ஒருவரிடம் ஒருவர் பொறாமை கொண்டு, ஒருவரோடொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக ஒருவரையொருவர் பூஜிப்போமாக.

Exit mobile version