ஆன்மிகம் பற்றிய விவேகானந்தரின் தத்துவங்கள்!

111. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.
ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவ பெருமானைக் காண்பவனே, உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்.
சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனு டைய வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக் கிறது.

112. ஒரு மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருந்தால் அன்றி கோயிலுக்கு வருவதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றனவாகும்.
உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பவர் களின் பிரார்த்தனைகள் சிவபெருமானால் நிறைவேற்றப்படுகின்றன.
யார் தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு சமயத்தைப்பற்றி மற்றவர்களுக்குப் போதிக்கிறார்களோ அவர்கள் இறுதியில் தோல்வியடைகிறார்கள்.

113. அமைதியும் தூய்மையும் கொண்ட ஆன்மிகத்தில் இரவும் பகலும் அமிழ்ந்து வாழ முயலுங்கள்.
எது பயனற்ற மாயாஜாலமே அதன் நிழல்கூட உங்கள் மீது பட வேண்டாம் உங்கள் காலின் கட்டை விரல்கூட அதன்மீது படிய வேண்டாம்.

114. முதலில் பெரிய மகான்களின் வழி பாட்டைக் கொண்டுவர வேண்டும். அழியாத உண்மைகளைக் கண்டறிந்த அந்த மகான்களின் வாழ்க்கையை, மக்கள் பின்பற்றுவதற்கான லட்சியங்களாக வழங்கவேண்டும்.
இந்தியாவிலுள்ள ராமர், கிருஷ்ணர், ஹனுமான், ஸ்ரீராம கிருஷ்ணர் முதலியோர் அத்தகையவர்கள்.
இங்கு ஸ்ரீராமருடையவும் ஆஞ்சநேய ருடையவும் வழிபாட்டை உன்னால் கொண்டு வர முடியுமா?
தற்போதைய சூழ்நிலைக்கு, பிருந்தாவனக் கண்ணன் தேவையில்லை, ஒதுக்கிவிடு. சிங்கக் குரலில் கீதையைக் கூறிய கிருஷ்ணனின் வழிபாட்டை நாடு முழுவதும் பரப்புங்கள்.
அன்றாட வாழ்வில் ஆற்றல் அனைத்திற்கும் இருப்பிடமான சக்தி வழி பாட்டைக் கொண்டு வாருங்கள்.

115. நீ நேர்மையுடன் இரு, தைரியமாக இரு, எந்த நெறியானாலும் அதைப் பக்தி சிரத்தை யுடன் பின்பற்று, அப்போது நீ இறைவனை அடைவது உறுதி.

116. எப்போதுமே இதயத்தைப் பரிபக்குவப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இதயத்தின் மூலம் பேசுவது இறைவன்; அறிவின் மூலம் பேசுவது நீங்கள்.

117. ஞானத்துடன் இணைந்த பக்தியால் இறைவனை வழிபடுங்கள். பக்தியுடன் எப் போதும் விவேகத்தை இணைத்துக் கொள்ளுங்கள்.

118. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்.

119. பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.

120. ராமாயணம், மகாபாரதம், உப நிடதங்கள் ஆகியவற்றிலுள்ள சிறிய கதைகளை எளிய நடையில் நூல்களாக வெளியிட வேண் டும்.
அவற்றை நம் சிறுவர்கள் படிக்கும்படிச் செய்யவேண்டும்.

121. முதலில் நாம் தெய்வங்களாவோம். அதன் பின்பு பிறரும் தெய்வங்களாகத் துணை புரிவோம். ‘ஆகுக , ஆக்குக’ என்ற இதுவே நமது தாரக மந்திரமாக இருக்கட்டும்.

122. தீயவருக்கு உலகம் தீய நரகமாகத் தெரிகிறது. நல்லவருக்குச் சுவர்க்கமாகத் தெரி கிறது.
அருளாளர்களுக்கு அருள்வடிவமாகத் தெரிகிறது. பகையுணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்புமயமாகத் தெரிகிறது.
சண்டை சச்சரவு செய்வோருக்குப் போர்க்களமாகத் தெரிகிறது.
அமைதியாளருக்கு அமைதிக் களஞ் சியமாகத் தெரிகிறது.
முழுமையுற்ற மனித னுக்கு எல்லாமே தெய்வமாகத் தெரிகிறது.
அவன் அனைத்தையும் தெய்வமாகவே காண் கிறான்.

TamilSK.com

123. நமது சமயத்தின் மகத்தான உண்மை களை உலகமெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். உலகம் அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருக் கிறது.

124. நன்மைகள் அனைத்திற்கும் இறைவன் காரணம் என்றும், தீமைகளுக்கு நீயே காரணம் என்றும் கொள்வதே நல்லது.
இதனால் பக்தி யும் சிரத்தையும் உண்டாகும்; அவனது அருள் கிட்டும். உன்னை யாரும் படைக்கவில்லை;
நீயே உன்னைப் படைத்துக் கொண்டாய் இதுவே விவேகம், இதுவே வேதாந்தம்

125. நன்மை எல்லாம் இறைவனால் செய்யப் படுகின்றன என்றும், தீமையைச் செய்பவன் தானே என்றும் கொள்ள வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த இதுவே எளிய வழி.

126. எனக்கு அரசியலில் நம்பிக்கை கிடை யாது. கடவுளும் சத்தியமுமே இந்த உலகில் உண்மை அரசியல் ஆகும். மற்றவையெல்லாம் வெறும் குப்பை.

127. உடலில் இரத்தம் தூயதாகவும், வன்மை பெற்றும் இருந்தால் நோய்க்கிருமி எதுவும் உயிர்வாழ முடியாது.
நமது சமுதாயத்தின் இரத்தம் ஆன்மிக வாழ்க்கையாகும்.
அது தூய்மையோடிருந்து வலிமையோடு சீராக ஓடினால் மற்ற எல்லாம் சரியாக இருக்கும்.
அந்த இரத்தம் மட்டும் சுத்தமாக இருந்தால், அரசியல், சமுதாயம், பொருளாதாரம் முதலியவற்றிலுள்ள குறைபாடுகள் எல்லாம் நாட்டின் வறுமைகூட நீங்கிவிடும்.

128. அரசியல், சமூக முன்னேற்றங்கள் எல் லாம் அவசியமல்ல என்று நான் சொல்ல வில்லை.
ஆனால் அவையெல்லாம் இந்த நாட்டிற்கு இரண்டாம் பட்ச முக்கியத்துவமே யுடையன என்றும், சமயமே இங்கே தலை சிறந்ததாகும் என்றும் நான் கூறுகிறேன். இதை நீங்கள் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

Exit mobile version