கர்மயோகம் பற்றிய விவேகானத்தரின் கருத்து!

104. எந்தக் கடமையையும் அலட்சியப் படுத்தக்கூடாது. தாழ்ந்த வேலைகளைச் செய்வதனாலேயே, ஒருவன் தாழ்ந்தவன் கிவிடமாட்டான். உயர்ந்த வேலைகளைச் செய்வதனாலேயே ஒருவன் உயர்ந்தவன் ஆகிவிடமாட்டான். எந்த வேலையைச் செய் கிறான் என்பதைக்காட்டிலும் எப்படிச் செய் கிறான் என்பதைப் பொறுத்தே எவனையும் மதிப்பிட வேண்டும்.

105. கடுந்தவத்தினால் ஆற்றல் ஒருவனை வந்தடைவது என்னவோ உண்மைதான்.
ஆனாலும் பிறர்பொருட்டுப் பாடுபடுவதுதான் உண்மையான தவம் ஆகும்.
கர்மயோகிகள், கர்மம் செய்வதை, தவத்தின் ஒரு கூறாகவே கருதுகிறார்கள்.
சுயநல உணர்வு இன்றி, பிறர் நலத்துக்காக ஒருவன் உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தவம் உண்டு பண்ணுவதுடன், இதயத்தையும் தூய்மைப்படுத்துகிறது.
மேலான ஆன்மிக உணர்வையும் அவனிடம் ஏற்படுத்துகிறது.

106. செயலின் மூலம் மனதைத் தூய்மை யாக்குவதே கர்மயோகமாகும்.

107. நீங்கள் செய்யும் எதற்கும் பாராட்டுக் களையோ பரிசுகளையோ எதிர்பார்க்காதீர்கள். ஒரு நல்ல காரியத்தைச் செய்தவுடனே நாம் அதற்கான பரிசுகளை எதிர்பார்க்க ஆரம்பிக் கிறோம்.
ஏதாவது ஒரு தர்ம காரியத்திற்காகப் பணம் கொடுத்தவுடனே, நம்முடைய பெயர் என்று பத்திரிகையில் பளபளக்க வேண்டும் நினைக்கிறோம்.
இத்தகைய ஆசைகளில் விளைவாகத்தான் துன்பங்கள் தோன் கின்றன. இந்த உலகில் மகத்தான மனிதர்கள் அனைவரும் யாருக்கும் தெரியாமலே வாழ்ந்து, மறைந்திருக்கிறார்கள்.

108. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மை யைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர் களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம்.

109. கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது.
கர்மம் தனக்கு உரிய பலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும்.
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்திவைக்க வும் முடியாது.
அதே போல, நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்கு உரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

110. இதயத்தை இறைவனுக்கு அர்ப் பணித்து. கைகளால் காரியங்களைச் செய்து கொண்டு, மனிதர் இந்த உலகில் வாழ வேண்டும்.

Exit mobile version