பிரம்மசரியம் பற்றிய விவேகானந்தரின் கருத்து!
65. முழுமையான பிரம்மசரியத்தால் அறிவாற்றலும் ஆன்மிக ஆற்றலும் பெருகு கின்றன.
66. கற்புநிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும் பொழுது அந்த இனத்திற்கு முடிவு காலம் நெருங்குவது தெளிவாகி விடுகிறது.
67. காம எண்ணமும் காமச் செயலைப் போலவே தீயதாகும். ஆசையை அடக்குவதே மிகச் சிறந்த பயனை விளைவிக்கும்.
68. பிரம்மசரியத்தை உறுதியாகக் கடைப் பிடிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறைதான் கேட்ட தையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்ம சரியம் நம் நாட்டில் இல்லாமற் போனத னால்தான் எல்லாமே இன்று அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.