44. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சில ருடைய வரலாறே உலக சரித்திரமாகும்.
45. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக்கொள்வது மிகப் பெரிய பாவம் உன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. பிரம்மமே நீ என்பதை அனுபவம் மூலம் தெரிந்துகொள்.
46. முன்வினை, அது இது என்பதையெல் லாம் தூக்கி வீசி எறி. முற்பிறவியின் வினைப் பயனால் இப்போது நீ இந்தப் பிறவியை எடுத்திருப்பது உண்மையானால், நல்ல செயல் களைச் செய்வதன் மூலம் முற்பிறவியின் தீய பலன்களை அழித்து, இந்தப் பிறவியிலேயே நீ ஏன் ஜீவன் முக்தனாகக்கூடாது? விடுதலை அல்லது ஆத்மஞானம் உன் கைகளிலேயே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்.
47. உன்னிடம் அளவற்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள். பிறகு அந்த நம்பிக்கையை நாட்டிற்கு வழங்கு.
48. நானும் நீங்களும் நாம் ஒவ்வொருவரும் Kஷியாவோம் என்ற தன்னம்பிக்கை நமக்கு ஏற்பட வேண்டும். நமக்குள் எல்லா ஆற்றலும் இருப்பதால், நம்மால் உலகத்தையே இயக்க முடியும்.
49. இளைஞர்களே! எனது நம்பிக்கை எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது. நமது தாய்த் திருநாட்டின் அறைகூவலுக்குச் செவி சாய்ப்பீர்களா? உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்பு வதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமய மான எதிர்காலம் உங்களுக்காகக் காத்து நிற் கிறது என்பேன். எதற்கும் கலங்காத நம்பிக்கை, எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும். சிறுவனாக இருந்தபோது எனக்கு என்னிடம் அத்தகைய தன்னம்பிக்கை இருந்தது. உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களிடத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். அளப்பரிய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவருடைய ஆன்மாவிலும் அடங்கிக் கிடக்கிறது என்பதில், உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெறும். புதிய இந்தியா உருவாகிவிடும் என்பதில், உங்களுக்கு அசை யாத நம்பிக்கை எழ வேண்டும்.