35. வலிமையோடு இருங்கள், மூடக் கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். எனக்கு வயது ஏற ஏற, எல்லாமே ஆண்மை என்ற ஒன்றில் அடங்கியிருப்பதாகக் காண்கிறேன். இதுவே நான் தரும் புது வேதம்.
36. வலிமை, அளவற்ற வலிமை இதுவே நமக்கு இப்போது தேவை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
37. இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மன வலிமையும் வாய்ந்தவர்களே நம் நாட்டிற்கு இப்போது தேவை.
இந்த அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களையெல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக்கூடிய மனவலிமை;
ஆழ்ந்த கடலின் அடித்தளத்திற்குப் போக வேண்டியி ருந்தாலும், மரணத்தை நேருக்கு நேரே சந்திக்க வேண்டி வந்தாலும், எடுத்த காரியத்தை எவ்வா றேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம் இவையே நமக்கு இப்போது வேண்டும்.
38. உணவு, வாழ்க்கைமுறை, எண்ணம், மொழி ஆகிய அனைத்திலும் ஆற்றல் பொங்கித் ததும்பி நிரம்பி வழிய வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் உயிர்ச் சக்தியைப் பாய்ச்சினால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் இரத்தம் பரவி, எல்லாச் செயல்களிலும் உற் சாகமும் புத்துணர்ச்சியும் உண்டாகும்.
அதன் மூலம் இந்த நாட்டு மக்கள் விழிப்படைந்து, வாழ்க்கையின் இன்னல் இடுக்கண் முதலிய வற்றிலிருந்து விடுபடுவார்கள்.
இல்லாமல் போனால், இந்த நாட்டு மக்கள் விரைவில் அழிவு எய்தி மறைந்து போவார்கள்.
39. நீ உன் உடலை மிகவும் வலிமையுள்ள தாக ஆக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களும் அவ்விதமே செய்யும்படிச் சொல்லித் தர வேண் டும்.
இப்போதும்கூட நான் அன்றாடம் தோள் களை வலிமையாக்கும் கர்லாக் கட்டைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்து வருவதை நீ பார்க்க வில்லையா?
காலையும் மாலையும் நீ நன்றாக நடந்து நடைப் பயிற்சி செய்ய வேண்டும். மற்றக் கடினமான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
உடலுக்கும் மூளைக்கும் சரி சமமாகப் பயிற்சி தர வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மற்றவர்களை எதிர்பார்ப் பது நல்லதல்ல. உடலை வலிமையாக வைத் திருக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்தால் பிறகு அவர் களே அதைச் செய்து கொள்வார்கள்.
இந்த வகை யான கல்விதான் இப்போது தேவை என்பதை அவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.
40. உங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலேயே வலிமை உடையவர்களாக ஆக்குங்கள். பல வீனத்தைச் சொல்லித் தராதீர்கள். அவர்களை வலிமையானவராக ஆக்குங்கள்.
தைரியமானவர்களாக, எல்லாவற்றையும் வெல்பவர்களாக, எல்லாத் துன்பங்களையும் ஏற்பவர்களாக ஆக்குங்கள். அவர்களைத் தங்கள் கால்களி லேயே நிற்பவர்களாக உருவாக்குங்கள்.
41. உடலிலும் மனதிலும் வலிமை இல்லா மல் போனால் ஆன்மாவை அடைய முடியாது. முதலில் நல்ல சத்தான உணவைச் சாப்பிட்டு உடலை வலிமைப்படுத்திக்கெள். அதன் பிறகே மனம் வலிமை அடையும். ‘நான் தாழ்ந்தவன், நான் தாழ்ந்தவன்’ என்று திரும்பத் திரும்ப நினைப்பது ஒருவனை இழிவுபடுத்தி நாச மாக்கிவிடுகிறது.
42. நீ உன்னைப் பலவீனன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரிய மாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழு வதையும் உன் தோள்மீதே சுமந்து கொள். உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமை யும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
43. வலிமை, ஆண்மை , க்ஷத்திரிய வீரியத் துடன் கூடிய பிரம்மதேஜஸ்- இவையே இப் போது நமக்கு வேண்டும்.