சுவாமி விவேகானந்தர்

வீரனாக எழுந்து நில்! சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்!

1. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவ தில்லையா? தாரைகளும் தப்பட்டைப்பறை களும் இந்தியாவில் கிடைக்காமலா போய் விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக் கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய்.

பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2. உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகிறேன்.

3. மிகப் பெரிய உண்மை இது- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை , நிரந்தரமான வள வாழ்வு, அமரத்துவம் ஆகும். பலவீனம் இடை யறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்!

4. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத் தால் வலிமை படைத்தவனாகவே நீ ஆகி விடுவாய்.

5. இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர் களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
6. உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக் கின்றன என்று நீ நினைப்பாயானால், அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்.

7. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான் மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

8. குழந்தாய்! நான் வேண்டுவதென்ன தெரி யுமா? பயம் என்பதையே அறியாத இரும்பினா லான உள்ளமும் இதயமுமே.

9. என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு உயர்ந்தவர்களாக இருக்க வேண் டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் பேராற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும், இருந்தே ஆக வேண்டும் என்பதுதான் என் ஆணை.

10. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே! நீங்களா பாவிகள்! அப்படி மனி தனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல் பின்மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும்.

ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

11. நாம் எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள்; எதையும் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு.

12. ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீர னாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.

13. உங்களுடைய நரம்புகளுக்கு முறுக் கேற்றுங்கள். காலமெல்லாம் அழுதுகொண்டி ருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர் களாக எழுந்து நில்லுங்கள்.

14. தன் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையிலும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து செல்லும் ஏராளமான ரஜோகுணத்தைப் பெற்ற ஒரு மாவீரன் ஆன்மிக உண்மைகளை அறிய வேண்டும் என்னும் துணிவும், தேவைப்பட் டால் அதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக் கவும் தயாராக உள்ள வீரன்- தியாகத்தையே தன் கவசமாகவும் ஞானத்தையே வாளாகவும் ஏந்திய ஒரு மாவீரனே இப்போது நமக்கு மிகவும் தேவைப்படுகிறான்.

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகிநிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக, வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சா மல் எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

15. இனி அழுகை என்பதே கூடாது. சுய வலிமை பெற்று வீரர்களாக எழுந்து நில்லுங்கள். நம்மை ஆண்மை படைத்தவர்களாக்கும் மதமே நமக்கு வேண்டும். நம்மை ஆண்மை படைத் தவர்களாக்கும் கல்வியே நமக்கு வேண்டும்.

16. என்னால் எந்தக் குறைபாட்டையும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் கோழைத் தனத்தை மட்டும் தாங்க முடியாது. ஒருவர் ஓர் அடி அடித்தால் இரண்டு மடங்கு கோபித்துப் பத்து அடிகள் திருப்பித் தர வேண்டும். இது தான் ஆண்மை .

17.கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை .

ஏ கோழையே! முட்டாள்தனமாக என்ன பேசுகிறாய்? இப்படி ‘முடியாது, முடியாது’ என்று அழுது அழுதுதான் இந்த நாட்டையே நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள். மனித முயற்சி யால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது?

18. இந்த உலகம் கோழைகளுக்கல்ல. ஓட முயலாதே. வெற்றியையோ தோல்வியையோ எதிர்பார்க்காதே.

19. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். எல்லாத் தீமை களையும் எதிர்த்துப் போரிடு. எண்ணத்தில் ஏற் படும் தீமைகள், செயலில் ஏற்படும் தீமைகள் முதலிய எல்லாத் தீமைகளோடும் போரிட்டுக் கொண்டே இரு. இப்படி எதிர்ப்பதில் நீ வெற்றி பெற்ற பிறகுதான் அமைதி உன்னைத் தேடி வரும்.

20. இன்னல் இடுக்கண்களைக் கண்டு அஞ்சாமல் நாம் எதிர்த்தால், குரங்குக் கூட்டம் போல் அவை ஓடிவிடும். கோழைகள் ஒரு போதும் வெற்றியடைய முடியாது. இன்னல், அறியாமை, அச்சம் முதலியன நம்மை விட்டு ஓட வேண்டுமானால் அவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும்.

21. அவ்வப்போது உலகத்திடமிருந்து உங்களுக்குப் பலமான அடி கிடைக்கலாம்.
அதற்காக மனம் தளர்ந்து போகக் கூடாது. கணநேரத்தில் அது சரியாகிவிடும். எல்லாமே சரியாகிப் போகும்.

22. நாட்டின் பொன்னான எதிர்காலமே உங்களைத்தான் சார்ந்திருக்கிறது. நாட்டின் வருங்கால நம்பிக்கைகள் உங்களையே எதிர் நோக்கியுள்ளன. எனவே செயலற்று வாழ்க் கையை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிற உங்களைப் பார்க்கும் போது என் மனம் சொல்ல முடியாத வேதனைப்படுகிறது. உழைப்பில், உயரிய உழைப்பில் ஈடுபடுவீர் களாக! இதில் தாமதம் சிறிதும் வேண்டாம்.

23. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

24. ‘எதுவும் வரட்டும். உலகம் இருந்தாலும் சரி; அழிந்து விட்டாலும் சரி; நான் என் கடமையை மறக்கமாட்டேன்’- இவை பெரு வீரனின் வார்த்தைகள்.

25. உடல் பலவீனத்தையோ, மனப்பலவீனத் தையோ உண்டாக்கும் எதையும் நீங்கள் அணுகக்கூடாது என்பதே நான் உங்களுக்குப் போதிக்க விரும்பும் முதன்மையான உபதேசம் ஆகும்.

26. கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்! அஞ்சாதீர்கள்

27. தைரியசாலியால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும். சிங்கத்தையும் நரியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வேற்றுமை தெரியும்.

28. அளவற்ற பலமும் பெண்ணைப்போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன் ஆவான்.

29. பாரதமாதாவின் நன்மைக்காக அவளு டைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக் கிறது என்பதை நான் திட்டவட்டமாக அறிந் திருக்கிறேன்.

பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற் காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெரு மளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும், கருணையும் பொருந்திய பல நூறு புத்த பிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

30. இப்போது இந்தியாவுக்கு என்ன வேண்டும்? தியாகத்தோடு கூடிய குறைந்த பட்சம் ஆயிரம் இளைஞர்களே வேண்டும்; மூடர்கள் அல்ல, வீர மனிதர்கள், சுயநல மற்றவர்கள், எடுத்த காரியங்களைச் சிறப்பாகச் சாதித்து முடிக்கக் கூடியவர்கள் ஆகிய இப்படிப் பட்டவர்களே இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுகிறார்கள்.

31. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை நீ உருவாக்கிக்கொள்.

32. மனிதர்கள் மனிதர்களே நமக்கு வேண் டும். மற்றவை அனைத்தும் தயாராக வந்து சேரும். ஆனால் வலிமை மிக்க சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்கள் உண்மை யில் பிடிப்புக் கொண்ட இளைஞர்களே தேவை. அத்தகைய ஒரு நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும்.

33. தைரியமான சொற்கள், மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள், வீரர்களாக்கும் கொள்கை கள் இவையே நமக்கு இப்போது வேண்டும்.

34. மற்றவர்களின் நன்மைக்காக உன் வாழ்க்கையைத் தியாகம் செய். ‘எழுந்திருங் கள், விழித்துக்கொள்ளுங்கள். இலட்சியத்தை அடையும் வரை நில்லாதீர்கள்’ என்னும் அச்சமற்ற நிலையைத் தரும் செய்தியை ஏந்திக்கொண்டு வீடுவீடாகச் செல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button