சுய முன்னேற்ற பயிற்சிகள்

புறத்தோற்றம்

புறத்தோற்றம்

நமது தோற்றம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாகிறது. அது பிறரை நம் பக்கம் ஈர்க்கச் செய்கிறது. நமக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

நாம் நன்கு தோற்றமளிக்கும் வேளையில் தன்னம் பிக்கையும் ஊக்கமும் பிறக்கிறது. பிறர் நமது தோற்றத்தைக் கண்டு நம்மை மதிப்பிடுவதால் அவர்களுக்கு நம் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தைத் தோற்று விக்கிறது.

எனவே, நாம் எவ்விதம் தோற்றமளிக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது அவசியமானதாகும். சில சமயம் திறமைகள் இருந்தும்கூட தவறான தோற்றத் தினால் முன்னேற்ற வாய்ப்பை இழந்துவிட நேரிடுகிறது.

நம் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதால் நமது தவறான தோற்றத்தைத் தவிர்த்து நல்ல தோற்றமுடையவ ராக மாறிவிடலாம். பயிற்சி எண் 2 ஐப் பூர்த்தி செய்து பாருங்கள்.

பயிற்சி : 2

1. முகம் சுத்தத்துடன் பளிச்சிடுகிறதா?
2. நன்கு ‘ஷேவ்’ செய்யப்பட்டு உள்ளதா?
3. தாடி வளர்த்திருந்தால், அதனைச் சுத்தமாகக் கழுவி ஒழுங்காக ஒதுக்கிவிடப்பட்டுள்ளதா?
4. தலை முடி உங்களது முகத்தின் வடிவதற்கு ஒத்துப் போகுமாறு அமைந்துள்ளதா?
5. அது சுத்தமாக அழுக்கின்றி உள்ளதா?
6. தலை முடி காற்றில் பறக்காமல் ஒழுங்காகப் படியுமாறு வாரப்பட்டுள்ளதா?
7. கை கால் விரல்களில் நகங்கள் நீட்டிக் கொண்டிராமல் வெட்டப்பட்டுள்ளதா?
8. குளித்துவிட்டுப் புதிதாக காட்சியளிக்கிறீர்களா?
9. நல்ல உடை அணிந்திருகிறீர்களா?
10. உடைகள் அழுக்கின்றிச் சுத்தமாக உள்ளனவா?
11. அவை கசங்கித் தோற்றமளிக்காமல் சலவை செய்யப்பட்டுள்ளதாக உள்ளனவா?
12. அவை கிழிசல்களில்லாமல் உள்ளனவா?
13. அணிந்திருக்கும் உடைகள் உங்களது நிறத்திற்கு ஒத்துப் போகுமாறு உள்ளனவா?
14. காலணிகள் அழுக்கில்லாமல் சுத்தமாக ‘பாலிஷ்’ செய்யப்பட்டு காட்சியளிக்கின்றனவா?
15. நிமிர்ந்து நடக்கிறீர்களா?
16. முதுகை வளைக்காமல் நிற்கிறீர்களா?
17. கூனிக் குறுகி நடக்காமல் நேராக நடக்கிறீர்களா?
18. தலையைக் குனிந்து கொள்ளாமல் நிமிர்ந்து பார்க்கிறீர்களா?
19. அவசரமின்றி சாதாரண வேகத்தில் நடக்கிறீர்களா?
20. கைகளை வேகமாக வீசி நடக்காமல் இயல்பாக நடக்கிறீர்களா?
21. உட்காரும் போது குனிந்து உட்காராமல் நன்றாக நிமிர்ந்து உட்காருகிறீர்களா?
22. கைகளை எதிரில் உள்ள மேஜை மீது வைக்காமல் அமர்கிறீர்களா?
23. கால் மேல் கால் போட்டு உட்காராமல் இரு கால்களையும் தரைமீது வைத்து உட்காருகிறீர்களா?
24. தேவையின்றிக் கன்னத்தைச் சொறிவது போன்ற பலவித அங்க சேட்டைகளின்றிக்காட்சியளிக்கிறீர்களா?
25. முகம் சோர்வில்லாமல் காட்சி தருகிறதா?
26. கோபமில்லாத முகத்துடன் காட்சி அளிக்கிறீர்களா?
27. முகத்தில் சோகம் படராமல் தோற்றம் அளிக்கிறீர்களா?
28. மகிழ்வான முகத்துடன் தோன்றுகிறீர்களா?
29. முகத்தை இறுக்கி வைத்துக் கொள்ளாமல் இயல்பான முகத்துடன் தோன்றுகிறீர்களா?
30. டென்ஷன் இல்லாமல் இயல்பாகத் தோற்றம் அளிக்கிறீர்களா?
31. புன்முறுவலுடன் கூடிய முகத்துடன் தோன்றுகிறீர்களா?
32. கர்வமில்லாதவராகக் காட்சியளிக்கிறீர்களா?
33. பயமில்லாத முகத்துடன் தோன்றுகிறீர்களா?
34. முகம் உற்சாகத்துடன் காணப்படுகிறதா?
35. சுறுசுறுப்பான முகத்துடன் காட்சியளிக்கிறீர்களா?

மேற்கூறிய கேள்விகளுக்கு ‘ஆம்’ என பதிலளித்து இருப்பின் உங்களது புறத்தோற்றம் நல்ல முறையில் அமைந்துள்ளதென அறியலாம். அதிக அளவில் இல்லையென பதிலளித்திருப்பின், உங்களது புறத்தோற்றம் வாழ்வின் முன்னேற்றத்திற்குச் சாதகமாக அமையவில்லை என அறிந்து கொள்ளலாம்.

நாம் சிறந்த முறையில் காட்சியளிக்கும் போது மனத்தில் புத்துணர்வு ஏற்பட்டுவிடுகிறது. அது நம்மை சுறுசுறுப்புடன் இருக்கத் தூண்டுகிறது. எனவே. சிறந்த முறையில் காட்சியளிக்கப் பின்வருமாறு தோற்றமளிக்கப் பயிற்சி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

அட்டவணை :1

1. உடல் ஆரோக்கியத்துடன் காணப்படவேண்டும்.
2. பலவீனமுள்ளவர் போலத் தோற்றமளிக்கக் கூடாது.
3. உடலுக்குத் தேவையான அளவு சத்துள்ள உணவு உட் கொண்டு ஆரோக்கியத்துடன் தோற்றமளிக்க வேண்டும்.
4.அதிக பருமனாகவோ அல்லது மிகவும் மெலிந்தோ காணப்படக் கூடாது.
5.உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ற எடையுடன் காணப்பட வேண்டும்.
6.தினமும் நீராடி உடல் சுத்தத்துடன் காண வேண்டும்.
7.முகம் தாடி மீசையுடன் அலங்கோலமாகக் காட்சி தராமல் ஒழுங்காக முடி நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
8.பற்கள் சுத்தமாகத் துலக்கப்பட்டு வெண்மையாகக் காட்சியளிக்க வேண்டும்.
9.பேசும் சமயம் வாய் துர்நாற்றம் அடிக்கக்கூடாது.
10.சிகரெட் பிடிப்பது. வெற்றிலை போடுவது போன்ற பழக்க முடையவர் வாயை நன்றாகக் கொப்புளித்துக் கழுவி விட வேண்டும்.
11.பற்கள் கறைகளின்றிக் காணப்படவேண்டும்.
12.கண்களில் சோர்வு, அல்லது தூக்கம் காணப்படக் கூடாது.
13.இரவு அதிக நேரம் கண்விழிக்காமல் உறங்குவதால் காலையில் கண்கள் சுறுசுறுப்புடன் காண உதவும்.
14.கண்களில் மது அருந்திய மயக்கம் அல்லது அரைத் தூக்கம் போன்று கண்கள் சொருகித் தோற்றம் அளிக்கக்கூடாது.
15.தலை முடியின் அமைப்பு முகத்தின் வடிவத்திற்குப் பொருந்துமாறு அமைந்திருக்க வேண்டும்.
16.அது சுத்தமாக அழுக்கின்றிக் காணப்படவேண்டும்.
17.அது ஒழுங்காகப் படிந்திருக்குமாறு வாரிவிடப்பட வேண்டும்.
18.முகம் பசியால் சோர்வுற்றது போலக் காணக்கூடாது.
19.காலையில் சிற்றுண்டி அருந்துவதால் முகம் சோர்வின்றிக் காணப்படும்.
20.கைகால் விரல்களில் நகங்கள் நீட்டிக் கொண்டிராமல் ஒழுங்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.
21.உடல் நிறத்திற்கு ஏற்ற வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
22.வெளிர்நிற வண்ண உடைகள் அனைவருக்கும் பொருத்த மானவை.
23.உடை அழுக்கில்லாமலும், கிழிசல்கள் இல்லாமலும் காணப்பட வேண்டும்.
24. அவை கசங்களில்லாமல் சலவை செய்யப்பட்டதாக காணப்பட வேண்டும்.
25.காலணிகள் சுத்தமாகக் காட்சியளிக்க வேண்டும்.
26.நிமிர்ந்து நடக்க வேண்டும்.
27. தலையைக் குனிந்து கொண்டு கூனிக்குறுகி நடக்கக் கூடாது.
28. கைகளை வேகமாக வீசி நடக்காமல், சாதாரணமாக நடக்கவேண்டும்.
29. வெகுவேகமாகவோ அல்லது ஆமைபோல நகர்ந்தோ நடக்கக் கூடாது.
30.நிற்கும் போது சுவரில் சாயாமல் நிமிர்ந்து நிற்கவேண்டும்.
31.ஒரு காலைத்தூக்கி பின் சுவரில் வைத்து நிற்கக் கூடாது.
32அது போல, உட்காரும் போது வளைந்து உட்காராமல் நிமிர்ந்து அமரவேண்டும்.
33.எதிரில் உள்ள மேஜைமீது கைகளை ஊன்றிக் கொண்டோ அல்லது முகத்திற்கு முட்டு கொடுத்தோ உட்காரக்கூடாது.
34.கால்களை ஒன்றன் மேல் ஒன்று போட்டுக் கொண்டோ அல்லது எதிரில் உள்ளவற்றின் மேல் தூக்கிவைத்துக் கொண்டோ உட்காரக் கூடாது.
35.அங்க சேட்டைகள் புரியக் கூடாது.
36.முகம் சலனமின்றிச் சாதாரணமாகக் காணப்படவேண்டும்.
37.நமது உள் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது.
38.முகம் உற்சாகத்துடன் காணப்பட வேண்டும்.
39.மகிழ்வுள்ளவராகக் காணப்பட வேண்டும்.
40.புன்முறுவலுடன் காட்சியளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button