மூன்று திருமண வாழ்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட வனிதா விஜயகுமார் தன்னுடைய நான்காவது திருமணத்துக்கு ரெடியாகி வருகிறார்.
இப்பொது 43வயதுதான் இவருக்கு. ஆனாலும் 3 திருமணங்கள் இடைநடுவே பிசு பிசுத்து போச்சுது. தனது பெற்றோர்ருடன் இருந்த கருத்து வேறுபாட்டை மீடியா முன்பு பேச தொடங்கி தனதுதிருமண வாழ்க்கைவரை பல சர்ச்சைகளாள பிரபலமானவர் வனிதா.
விஜயகுமார் – மஞ்சுளா தம்பதின்ட மூத்த மகள் தான் வனிதா. 1995ஆம் ஆண்டு நம்ம தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக இவங்க அறிமுகமானங்க. அதன் பின் அடுத்தடுத்த நடித்த திரைப்படங்கள் தோல்வியடைய 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து தன்னோட லைப்ல செட்டில் ஆனாங்க. ஆகாஷுக்கு பிறந்தவர்கள் தான் விஜய ஹரி, ஜோவிகா
ஆகாஷை விவாகரத்து செய்துட்டு ஆனந்த் என்ற தொழிலதிபரை ரெண்டாவதாக திருமணம் செய்தாங்க. இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா. வனிதாவோட மகன் விஜயஹரியை முதல் கணவரான ஆகாஷுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.
வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த ஜோவிகா வனிதாவுடன் வசித்து வருகிறார். 2வது கணவருக்கு பிறந்தமகள் ஜெயனிதா தனது தந்தையுடன் வசிக்கிறார், பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மீள பிரபலமானார் வனிதா.
2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார் வனிதா. அவருடன் ஏற்பட்ட மோதலால் பிரிந்துவிட்டார்.
யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் துணிக்கடை ஒன்றையும் வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் வனிதா அவ்வபோது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா 4-வது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார் என்பது போல பதில் வழங்கி இருக்குறாங்க.