திருவாசகம் வினா விடை

திருவாசகம் யாரால் அருளிச்செய்யப்பட்டது?
மாணிக்கவாசக சுவாமிகளால்

மாணிக்கவாசகரால் அருளிச்செய்யப்பட்ட ஏனைய நூல் எது?
திருக்கோவையார்

திருவாசகம், திருக்கோவையார் என்பன எத்தனையாம் திருமுறையினுள் அடங்குகின்றது?
எட்டாந் திருமுறையினுள் அடங்குகின்றது.

திருவாசகத்தின் சிறப்பு யாது?
மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல இறைவனால் எழுதப்பட்ட சிறப்பினை உடையது ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மை உடையது.

மண்ணாள்வான் மதித்தும் இரேன் என திருவாசகத்தில் கூறப்பட்டதன் பொருள் யாது?
மாணிக்கவாசகர் கல்வியையோ, பதவியையோ, ஒருகாலமும் பெரிதாக மதித்திலர் என்பதாகும்.

திருவாசகம் முழுவதும் பரவிக்காணப்படும் விடயம் யாது?
மாணிக்கவாசகர் இறைவனை நினைத்து நினைத்து உருகிய உருக்கமே திருவாசகம் முழுவதும் பரந்து காணப்படுகிறது.

“பாரொடு விண்ணாய்ப்…..”என்ற பதிகம் திருவாசகத்தில் எப்பகுதியில் காணப்படுகின்றது?
“வாழாப்பத்து” என்ற பகுதியில் காணப்படுகின்றது

“பாரொடு விண்ணாய்ப். என்ற பதிகத்தின் தலம், பாடியவர் என்பவற்றைக் குறிப்பிடுக?
பாடியவர் – மாணிக்கவாசகர்
தலம் – திருப்பெருந்துறை

“பாரொடு விண்ணாய்ப்….” என்ற பதிகத்தினை வரிக்கிரமமாக எழுதுக.
திருச்சிற்றம்பலம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே
திருப்பெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கொடுத்து உரைக்கேன்
ஆண்ட நீ அருளிலையானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்று அருள்புரிவாயே.

இப்பதிகத்தில் சிவபெருமானின் சிறப்பு வெளிப்படுமாற்றைத் தருக.
இறைவன் மண்ணும் விண்ணுமாய் எங்கும் நீக்கமற நிறைத்து விளங்குகின்றார்.
எல்லாச் சிறப்புக்களும் பொருந்தியுள்ளவர்
சிவ உலகின் வேந்தனே
திருப்பெருந்துறையில் கோயில் கொண்டு அருளிய சிவனே என சிறப்பிக்கப்படுகின்றது

இப்பதிகத்தில் மாணிக்கவாசகர், சிவன்மீது கொண்ட பத்தி வெளிப்படுமாற்றைத் தருக.
அடியேனுக்கு நின் திருவடித்துணையின்றி வேறு பற்ற ஒன்றும் இல்லை என்பதைக் கண்டருள்வாயாக! எனக் கூறுவதும்.
நீயே திருவருள் புரியாவிடின் பின் எவருடன் நொந்து கொள்வேன்?
கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நின் பிரிவினைப் பொறுத்து உயிர்வாழ்கிறேன்
நின் திருவடிக்கண் வருமாறு அருள் புரிவாயாக! எனப் பாடுவது மாணிக்கவாசகர் சிவன் மீது கொண்ட பக்தி புலப்படுத்தப்படுகிறது

Exit mobile version