பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர் யார்?
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
நாவலர் பெருமான் விட்டுச் சென்ற பணிகளை முன்னின்று நிறைவேற்றியவர் யார்?
சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார்
இவர் பிறந்த இடம் யாது?
பருத்தித்துறையில் உள்ள புலோலியில் பிறந்தார்.
இவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?
1878ஆம் ஆண்டு
இவரது பெற்றோர் யாவர்?
தாய் – வள்ளியம்மை
தந்தை – சுப்பிரமணியப்பிள்ளை
இவர் எம்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்?
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்
இவரது கல்வி, தொழில் நிலைமைகளைக் குறிப்பிடுக?
சென்னைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரியான இவர் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகவும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் உபஅதிபராகவும் கடமையாற்றினார்.
இவரது ஆளுமைப் பண்புகள் எவை?
பேராசான்
சிறந்த நிர்வாகி
தலைசிறந்த கல்விமான்
இவரது கற்பித்தல் பணி எவ்வகையில் காணப்பட்டது?
குருசீட முறையிலும்
இவர் மாணவர் மத்தியில் எதனை வலியுறுத்தினார்?
நடக்க வேண்டுமென வற்புறுத்தினார்.
இவரது சைவசமயப் பணிகள் எவை?
சைவர்கள் தமது பண்பாட்டைப் பின்பற்றப் பல வழிகளிற் பணியாற்றினார்.
மத மாற்றத்தைத் தீவிரமாகக் கண்டித்தார்.
நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார்.
இந்துபோட் எனப்படும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக (1928-1930) வரை பல பணிகளை ஆற்றினார்.
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் தலைவராக (1948 – 1953) வரை இருந்து ஆலயத்தைப் புனருத்தாரணஞ் செய்து 1952 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார். அடியவர்கள் தங்குவதற்கென திருஞானசம்பந்தர் மடத்தையும் கட்டுவித்தார்.
ஆலயத்திலே நடைபெறுகின்ற மிருக பலியை எதிர்த்து சமய சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
இவர் சைவ மாணவர்களுக்கென எழுதிய நூல்கள் எவை?
சைவபோதம் முதற் புத்தகம்
சைவபோதம் இரண்டாம் புத்தகம்
திருவருட்பயன் உரை
சுப்பிரமணியப் பெருமானின் திருப்பெருவடிவம்
சைவசமய சாரம்
சைவக் கிரியை விளக்கம்
கந்தபுராண விளக்கம்
அப்பர் சுவாமிகளின் தேவாரச் சிறப்பு
சைவ மகத்துவம்
ஆறுமுக நாவலர்
இந்து சமயத்திற் சைவம்
சிவஞான போதத்தின் சுருக்கம்
கிறிஸ்தவ விமர்சகர்களுக்குப் பதில்
முதலான நூல்களை எழுதினார்.
இவரது பணிகள் எங்கெல்லாம் வியாபித்துக் காணப்பட்டது?
இலங்கை, இந்தியா, மலேசியா முதலான நாடுகளில் பரவிக் காணப்பட்டது.
“இவரது சிறப்புப் பற்றி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கூறியது யாது?
பெரியார் அவர்களது வாழ்க்கை சமய வாழ்க்கையாகும். அவரின் ஒவ்வொரு மூச்சும் சைவ மூச்சாகும் எனச் சிறப்பித்தார்.
இவர் எத்தனையாம் ஆண்டு இறையடி சேர்ந்தார்?
1953 ஆம் ஆண்டு