திருமுறைகள்
திருமுறைகள் தொகுக்கப்பட்டதன் நோக்கம் யாது?’
தெயவீக உணர்வு பெருகவும், சமய ஒழுக்கத்தைப் பேணவும் தொகுக்கப்பட்டது
திருமுறையைத் தொகுப்பித்தவர் யார்
இராஜராஜசோழன்
திருமுறையைத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
வேத, ஆகம வரிசையில் அடுத்துத் தோன்றிய சைவ சமய நூல்கள் எவை?
புராண, இதிகாசங்கள்
புராணம் என்றால் என்ன?
அடியார்களின் சிவபக்திச் செயல்கள், இறைவனது திருவருட்சிறப்பு போன்றவற்றைக் கதை வடிவில் கூறும் பழைமையான நூல்கள் புராணங்கள் எனப்படும்.
புராணங்கள் எத்தனை?
18
சிவபுராணங்கள் எத்தனை?
10
சிவபுராணங்கள் எவற்றைப் புலப்படுத்துகின்றது?
சிவபக்தி
சிவனது வீரச்செயல்கள்
சிவனது அருட்டிறன்
சிவனது தனித்துவம்
சிவனது மேன்மை
திருமுறைப் பாடல்களில் எப் புராண, இதிகாசக் கருத்துக்கள் கூறப்படுகின்றது?
கங்கையைச் சடையில் தரித்தமை
திரிபுரம் எரித்தமை
சிவன் நஞ்சுண்டமை
யமனை உதைத்தமை.
மன்மதனை எரித்தமை.
சிவன் நஞ்சுண்டமை
சிவன் தஞ்சுண்டமை பற்றிய குறிப்பு நமது தேவாரத்தில் பாடிய நாயன்மார்கள் யாவர்?
சம்பந்தர், சுந்தரர்
சம்பந்தரின் எந்தேவாரத்தில் சிவன் நஞ்சுண்ட குறிப்புக் காணப்படுகின்றது?
வேயுறு தோளிபங்கன்…
“இடரினும் தளரினும்
என்ற தேவாரத்தில்
சுந்தரரின் எத்தேவாரத்தில் சிவன் நஞ்சுண்ட குறிப்பு காணப்படுகின்றது?
‘ஆலந்தானுகந்து” என்ற தேவாரத்தில்
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தமைக்கான காரணம் யாது?
அழிவில்லாப் பெருவாழ்வு விரும்பியமையினால் ஆகும்.
தேவர்கள் யாருடைய உதவியுடன் பாற்கடலைக் கடைய முற்பட்டனர்?
அசுரர்களின் உதவியுடன்
திருப்பாற்கடலைக் கடைவதற்குப் பயன்படுத்திய பொருட்கள் எவை?
மந்தரமலையை மத்தாகவும் வாசுகிப்பாம்பைக் கடைக்கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.
இந்த தேவர்களும், அசுரர்களும் வாசுகிப்பாம்பினால் கடைந்தபோது வலிதாங்காத பாம்பு என்ன செய்தது?
ஆலகாலம்” என்னும் நஞ்சினைக் கக்கியது.
ஆலகால நஞ்சின் கோரத்தைத் தாங்க முடியாத தேவரும், அசுரரும் என்ன செய்தனர்?
ஓடோடி வந்து சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர்
இறைவன் தேவர்களையும், அசுரர்களையும் காத்தற் பொருட்டு என்ன செய்தார்?
ஆலகாலம்” என்ற நஞ்சை எடுத்து உண்டார்.
சிவனால் உண்ட நஞ்சு என்ன செய்தது?
சிவனது கண்டத்தில் / தொண்டையில் தங்கியது. கண்டம் நீல நிறமாக மாறியது.
சிவன் நஞ்சை உண்டமையினால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடமுண்டகண்டன்
ஆலமுண்டகண்டன்
கண்டம் நீல நிறமாக உள்ளமையினால் எப்பெயர் பெற்றார்?
நீலகண்டர் என அழைக்கப்பட்டார்.
சுந்தரரின் ‘ஆலந்தானுகந்து.. எனத் தொடங்கும் தேவாரப்பாடலில் “கால காலனை” என்னும் அடிகுறிப்பிடுவது எதனை?
இறைவன் யமனை உதைத்தபோது
சம்பந்தரின் “வேயுறு தோளி பங்கன்….” எனத் தொடங்கும் தேவாரத்தில் “மாசறு திங்கள் கங்கை முடி மேலணிந்து…. ….” எனும் அடி குறிப்பிடுவது எதனை?
இறைவன் கங்கையைச் சடையில் தரித்த புராணக்கதை
சிவன் இராவணனது கர்வம் அடக்கியமை
இதிகாசம் என்றால் என்ன?
இறைவன் தன்னிலையில் இருந்து இறங்கி, பல்வேறு வடிவங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள் புரிந்த சம்பவங்களை கதை வடிவில் கூறுவனவே இதிகாசம் எனப்படும்.
இதிகாசங்கள் எவை?
மகாபாரதம்
இராமாயணம்
இராமாயணத்தில் சிவன் யாருக்கு அருள் புரிந்ததாகக் கூறப்படுகின்றது?
இராவணனுக்கு
சம்பந்தரின் எப்பாடலில் இறைவன் இராவணனது கர்வத்தை அடக்கியமை பற்றிக் கூறப்படுகின்றது?
“எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தமாம் பேறு தொடுத்தவர் என்ற தேவார வரிகள் மூலம் அறிய முடிகிறது.
இராவணன் கைலாய மலையைப் பெயர்க்க முற்பட்டமைக்கான காரணம் யாது?
இராவணன் புஷ்பக விமானத்திலேறி, ஆகாயமார்க்கமாகச் சென்றபோது. வழியில் கயிலைமலை தடையாக இருப்பதை உணர்ந்து அதனைப் பெயர்க்க முற்பட்டான்.
இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டமையினால் என்ன ஏற்பட்டது?
சிவபெருமான் தனது திருவடிப் பெருவிரலால் மலையை ஊன்றி, இராவணனின் நசித்து அவனது கர்வத்தை அடக்கினார்.
இறைவன் எதில் பிரியமுடையவராக இருந்தார்?
சாமவேதத்தில்
இராவணன், இறைவனை மகிழ்விப்பதற்கு யாது செய்தான்?
சாமகானத்தை இனிமையாகப் பாடினான்.
இறைவன் சாமகானத்தில் மகிழ்ந்தமையினால் இராவணனுக்கு எவற்றைக் கொடுத்தார்?
மந்திரவாளும், பிறவரங்களும் கொடுத்தருளினார்.