சுந்தரர் தேவாரம் வினா விடை
சுந்தரருக்கு பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை தடுத்தவர் யார்?
சிவபெருமான் நிகழாமல் தடுத்து அவரை ஆட்கொண்டருளினார்.
இறைவனால் தடுத்தாட் கொண்டதும் சுந்தரர் யாது செய்தார்?
கோயில்கள் தோறும் சென்று சிவபெருமானைப் பாடிப் பரவி வந்தார்.
சிவபெருமான் சுந்தரருக்குத் திருமண நிலையை எவ்வாறு வழங்கினார்?
திருவாரூரிலே பரவையாரைத் திருமணஞ் செய்து, இல்லறத்தில் ஒழுகும் நிலையை சிவபெருமான் அவருக்கு வழங்கினார்.
சுந்தரருக்கு வேண்டிய நெல் முதலியவற்றை வழங்கியவர் யார்?
குண்டையூர்க்கிழார்
ஒரு காலத்தில் மழை வளம் சுருங்கி சுந்தரருக்கு நெல் வழங்க முடியாது போனமையால், குண்டையூர்க்கிழாரின் வேண்டுதல் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது?
குண்டையூர் முழுவதும் நெல் மலையாகக் குவிந்தது.
மலையாகக் குவிந்த நெல்லை எடுத்துச் செல்ல சுந்தரர் யாது செய்தார்?
சுந்தரர் குண்டையூருக்கு அருகில் இருந்த திருக்கோளி என்று தலத்தில் நின்று பதிகம் பாடினார்.
சுந்தரர் குண்டையூரில் இருந்து நெல்லை எடுத்துச்செல்ல இறைவனை நோக்கிப் பாடிய பதிகம் யாது?
நீள நினைந்து அடியேன்…
“நீள நினைந்து அடியேன்…” என்னும் தேவாரத்தின் தலம், பர், பாடியவர், சந்தர்ப்பம் என்பவற்றைத் தருக?
பாடியவர் – சுந்தரர்
தலம் – திருக்கோளிலி
பண் – நட்டராகம்
சந்தர்ப்பம் – குண்டையூரில் குவிந்த நெல்லை மனிதரால் எடுத்துச் செல்ல முடியாது, என குண்டையூர்க்கிழார் சுந்தரரிடம் சென்று இச்செய்தியை அறிவித்தபோது கந்தரர் குண்டையூருக்கு அருகில் இருந்த திருக்கோளிலி எனும் தலத்துக்குச் சென்று பதிகம் பாடினார்.
“நீள நினைந்து அடியேன்…” என்ற தேவாரத்தினை அடிமுறை பிழையாது எழுதுக.
திருச்சிற்றம்பலம்
நீள நினைந்து அடியேன்
உமை நித்தலும் கைதொழுவேன்
வாள் என கண் மடவாள்
அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான்
குண்டையூர்ச் சில நெல்லுப்பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான்
அவை அட்டித் தரப்பணியே.
திருச்சிற்றம்பலம்
இத் தேவாரத்தில் சுந்தரரது பக்தி வெளிப்படுமாற்றைத் தருக?
சுந்தரர் திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை எப்போதும் கைகூப்பிக் கும்பிடும் அடியவன் எனக் கூறுவதில் இருந்து அவரது பக்தி புலப்படுகிறது.
இத் தேவாரத்தில் பரவையாரின் அழகு வெளிப்படுத்தப்படுமாற்றைந் தருக.
வாள் போலக் கூர்மையான கண்கள் உள்ளவள் எனக் கூறப்பட்டது.
சுந்தரர் திருக்கோனிலி இறைவனிடம் விடுத்த விண்ணப்பம் யாது?
குண்டையூரில் கொஞ்சம் நெல்லைப் பெற்றுள்ளேன். ஆயினும் அந்த நெல்லைக் குண்டையூரிலிருந்து பரவையின் மாளிகைக்கு கொண்டுவர உதவியாள் யாரும் கிடைக்கவில்லை. அந்த நெல்லைக் கொண்டு செல்வதற்கு அருள்புரிவீராக என விண்ணப்பித்தார்.
திருவாரூர்க் கோயிலின் முன் காணப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு வழங்கப்படும் மறுபெயர் யாது?
தேவாசிரியரியன் மண்டபம்
சுந்தரர் யாருக்கு அடியவள் எனக் கூறினார்?
தேவாசிரியன் மண்டபத்திலுள்ள சிவனடியார்களுக்கு அடியவன் என்று கூறினார்.
சிவனடியார்களைப் போற்றிப் பாடிய திருப்பதிகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
திருந்தொண்டர் தொகை என அழைக்கப்பட்டது.
திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்டவர்கள் யார்?
அறுபது தனியடியார்களின் பெயர் கூறியும், ஒன்பது தொகையடியார்களைப் பெயர் குறியாமல் பொதுவாகவும் பாடியுள்ளார்.
சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார் தம்பி பாடியருளியது மாது?
திருத்தொண்டர் திருவந்தாதி
திருந்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடப்படுவோர் யார்?
சுந்தரர்,சுந்தரரின் தாய், தந்தையர் ஆகியோரையும் சேர்த்து அறுபத்துமூன்று தனியடியார்களைப் பாடினார்.
பெரியபுராணம் எந் நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
திருத்தொண்டர்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் இரு நூல்களின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
பெரியபுராணத்தைப் பாடியவர் யார்?
சேக்கிழார்
தொகையடியார்கள் யாவர்?
தில்லைவாழ் அந்தணர், அப்பாலும் அடிச்சாந்தார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் முழுநீறு பூசிய முனிவர்.
“தில்லைவாழ் அந்தணர்தம்…. என்ற பதிகம் எதிஸ் உள்ளது?
திருத்தொண்டத்தொகையில் உள்ளது.
“தில்லைவாழ் அந்தணர்தம்…” என்ற பதிகத்தின் தலம், பண், பாடியவர் என்பவற்றைத் தருக?
பாடியவர் -சுந்தரர்
தலம் – திருவாரூர்
பண் – கொல்லிக்கௌவாணம்
“தில்லைவாழ் அந்தணர்தம் என்ற பதிகத்தினை அடிமுறை பிழையாது எழுதுக?
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
திருச்சிற்றம்பலம்
சுந்தரர் தான் யார் யாருக்கெல்லாம் அடியேன் எனக் கூறுகின்றார்?
தில்லைப்பதிவாழ் அந்தணர்களுக்கும்
குயவர் குலத்தவரான நீலகண்ட நாயனாருக்கும்
சிவனடியார்களுக்கும்
இயற்பகை நாயனார்க்கும்
இளையான்குடிமாற நாயனாருக்கும்
மெய்ப்பொருள் நாயனாருக்கும்
விறன்மிண்ட நாயனாருக்கும்
அமர்நீதி நாயனாருக்கும் அடியேன் எனக் கூறுகின்றார்.