உபநிடத சிந்தனைகள் வினா விடை

சைவசமயத்தின் முதல்நூல்கள் எவை?
வேதங்கள், ஆகமங்கள்

வேதங்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
நான்கு வகைப்படும்.
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்

நால்வேதங்களும் எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன?
சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள்

செயலுக்குரிய கர்ம காண்டப் பகுதியின் அடங்குபவை எவை?
சங்கிதைகள், பிராமணங்கள்

வழிபாட்டுக்குரிய உபாசன காண்டத்தில் அடங்குவது எது?
ஆரணியங்கள்

அறிவுக்குரிய ஞானகாண்டத்தில் அடங்குவது எது?
உபநிடதங்கள்

வேதங்களின் சாரமாக விளங்குவது எது?
உபநிடதங்கள்

வேதங்களின் சாரமாக அமைந்தமையினால் உபநிடதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேதாந்தம், வேதசிரசு

உபநிடதத்தின் சிறப்பை பாரதியார் எவ்வாறு பாடியுள்ளார்?
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை ஏதோரு நூல் இது போலே.

எமது பழைய கல்வி முறை யாது?
குருகுலக் கல்வி முறை

உபநிடதங்களின் விடயங்கள் எவ்வாறு காணப்படுகின்றன?
மாணவர்கள் குருவோடு பல்லாண்டுகள் சேர்ந்து வாழ்ந்து பெற்ற கல்வியின் அனுபவக் குறிப்புக்களாக உபநிடதம் விளங்குகிறது.

உபநிடதம் என்பதன் பொருள் யாது?
“அருகிலிருந்து கேட்டல்” எனப் பொருள்படுகின்றது.

உபநிடதம் பற்றி பலர் அறியாமைக்குப் காரணம் யாது?
உபநிடதங்கள் வடமொழியில் காணப்படுகின்றது.

உபநிடதங்கள் எவற்றை விளக்குகின்றன?
பிரபஞ்சம் பற்றிய விளக்கம் பிரமத்தின் இயல்புகள்
பிரமத்தின் எவ்வாறு அறிவது, அடைவது
சீவான்மாக்களின் இயல்புகள்

உபநிடதங்கள் சில தருக.
கடோபநிடதம்
சுவேதாஸ்வதர உபநிடதம்
ஐதரேய உபநிடதம்
பிருகதாரணிய உபநிடதம்
கேனபநிடதம்
தைத்ரீய உபநிடதம்

சுவேதாஸ்வதர உபநிடதம் எவ்வேதத்தைச் சார்ந்தது?
யசுர் வேதத்தைச் சார்ந்தது

சுவேதாஸ்வதர உபநிடதத்தில் காணப்படும் முனிவர் யார்?
சுவேதாஸ்வதர முனிவர்

சுவேதாஸ்வதர முனிவர் தனது சீடர்களுக்கு இறைவனைப் பற்றிக் கூறியவை யாவை?
உயிர்கள் அனைத்திலும் இறைவன் உறைகிறான்.
இறைவன் பிறப்பு இறப்பைக் கடந்தவன்.
ஆனால் உயிர்களோ பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சிக்கு உட்படுவன.
பாலில் வெண்ணெய் போல இறைவன், எங்கும் பரந்து காணப்படுகின்றான். அவனை அறியத் தியானம் செய்தல் வேண்டும்.
“ஓம்” எனும் பிரணவ மந்திரம், தியானம் என்பன இறைவனை உணர உதவும். இறைவனை அறிந்தோர், மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவர்.

பங்குனி உத்தரத்தின் சிறப்பு யாது?
இந்த நாளில் நாள், கோள், முகூர்த்தம் பார்க்காது திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. மேலும் உலக வாழ்க்கையின் விருத்திக்கும் இந்த நாள் சிறப்பாக அமைகின்றது.

உபநிடத சிந்தனைகள் வினா விடை

Exit mobile version