சமயம்

ஈழத்து ஆலயங்கள் வினா விடை

விநாயகர் ஆலயம் – முறிகண்டி விநாயர் ஆலயம்

முறிகண்டி விநாயகர் எங்கே அமைந்துள்ளது?
முல்லைத்தீவு மாவட்டத்தில், யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயப் பிள்ளையார் எவ்வாறு துணை புரிகிறார்?
வழித்துணைப் பில்லையாராக வீற்றிருந்து துணை புரிகிறார்.

வழித்துனைப் பில்ளையாராக வீற்றிருப்பதற்குரிய காரணம் யாது?
வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கும் இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ் ஆலயத்தில் தரித்து நின்று பிள்ளையாரை வழிபட்ட பின்னரே தம் பயணத்தைத் தொடர்வர்,

இவ் ஆலயத்தின் சிறப்பு யாது?
மிகச் சிறிய ஆலயமாக இருந்தாலும். மகிமையே பெரிது; மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர்.

இவ்வாலயத்தில் நடைபெறும் சடங்குகள் எவை?
பொங்கள் பொங்குதல், சோறூட்டல் போன்ற சடங்குகள் இடம்பெறுகின்றன.

இங்கு எத்தனை வேளை பூசைகள் இடம்பெறுகிறது?
மூன்று வேளைப் பூசைகள் இடம்பெறுகிறது.

சிவாலயம் – முன்னேஸ்வரம்

முன்னேஸ்வர ஆலயம் எங்கே அமைத்துள்ளது?
சிலாபம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது.

இவ்வாலயம் வேறு எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
அழகேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.

முன்னேஸ்வர ஆலயத்தின் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் என்பவற்றைத் தருக.
மூர்த்தி இறைவன் – முன்னைநாதர்
இறைவி – வடிவாம்பிகை
தலம் – முன்னேஸ்வரம்
தீர்த்தம்-மாயவனாறு (தெதுறு ஓயா )
தலவிருட்சம் – அரச மரம்

முன்னேஸ்வரத்தின் சிறப்புக்கள் எவை?
ஈழத்தில் தோன்றிய பஞ்ச ஈச்சரங்களில் முன்னே தோன்றியமை.
இராமன், இராவனைக் கொன்றதால் வந்த பிரம்மஹத்தி தோஷத்தை இவ்வாலயத்தில்
வழிபட்டு நீக்கினான்
அடியார்கள் இவ்வாலய தீர்த்தத்தில் பிதிர்க்கடன் செலுத்தவர்.
இவ்வாலயத்தை இராமன் வியாசர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

இராமன், இராவணனைக் கொன்றமையினால் ஏற்பட்ட தோஷம் யாது?
பிரம்மஹத்தி தோஷம்

முன்னேஸ்வரத்தை இராமன், வியாசர் போன்றோர் வழிபட்டதாகக் கூறும் நூல் எது?
தட்சிண கைலாய புராணம்

இவ்வாலயத்தைப் புனரமைப்புச் செய்த மன்னர்கள் யாவர்?
குளக்கோட்ட மன்னன்
6 ஆம் பராக்கிரமபாகு
9 ஆம் பராக்கிரமபாகு

இவ்வாலயம் யாரால் அழிக்கப்பட்டது?
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, பொருட்களும் சூறையாடப்பட்டன.

இவ்வாலயத்தின் அழிவிற்குப் பின்னர் மீள அமைத்துக் கும்பாபிஷேகம் செய்த மன்னன் யார்?
கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்

இவ்வாலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் மகோற்சவங்கள் எவை?
முன்னைநாதருக்கு நடைபெறும் மகோற்சவம்.
வடிவாம்பிகைக்கு நடைபெறும் மகோற்சவம் என இரண்டு மகோற்சவங்கள் வருடத்தில் நடைபெறுகின்றன.

முன்னைநாதருக்கு நடைபெறும் மகோற்சவத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்கள் எவை?
63 நாயன்மாருக்கு நடைபெறும் பக்தோற்சவம்
வேட்டைத் திருவிழா

இவ்வாலயத்திற்கென தனித்துவமான விசேட விழா எது?
சித்திரை மாதத்தில் இடம்பெறும் வசந்த நவராத்திரி மிக விசேடமானது.

இவ்வாலயம் பொதுவாக எவற்றுக்குச் சிறப்பாக அமைகிறது?
தனித்துவமான மரபுகளையும், வரலாறுகளையும் கொண்டமை.
தமிழ்,சிங்கள மக்களின் ஒற்றுமைக்குப் பாலமாக அமைகிறது.
ஈழத்து மக்களின் ஆன்மீக விருத்திக்கு ஆதாரமாகவும், விளங்குகின்றது.

அம்மன் ஆலயம் – காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம்

இவ்வாலயம் எங்கே அமைந்துள்ளது?
மட்டக்களப்பிலுள்ள காரைதீவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

கண்ணகி வழிபாட்டின் சிறப்பு யாது?
܀லங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு, தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. தமிழ்,சிங்கள மக்கள் கிராமியத் தெய்வமாக வழிபடுகின்றனர்.

இலங்கையிலே கண்ணகியம்மன் சிறப்புற்று விளங்கும் இடம் எது?
மட்டக்களப்பு

இவ்வாலயத்தில் மரபுரீதியான சடங்காக கொண்டாடப்படுவது எது?
வைகாசி மாதச் சடங்குகள்

வைகாசி மாதச் சடங்கு எவ்வாறு நடைபெறுகிறது?
வைகாசி மாதத்தில் வரும் பூரணையை அண்மித்த திங்கட்கிழமையில் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதச் சடங்கு எவ்வாறு நடைபெறுகிறது?
குளிர்த்திபாடி, பக்தர்கள் சடங்கினை நிறைவு செய்வர், இத் திங்கட்கிழமைக்கு முந்திய எட்டு நாட்பூசையும் கப்புகன்மாரால் நடாத்தப்படுகின்றன. அத்துடன் கண்ணகி வழக்குரை காதை படிக்கப்படுவதையும், மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருந்து கேட்பதும், உடுக்கு வாத்தியம் இசைக்கப்படுவதும், குளிர்த்தியன்று மடை பரவி அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தபின் சடங்கு நிறைவுக்கு வரும்

இவ்வாலயத்தில் வைகாசிச் சடங்கின் திங்கட்கிழமைக்கு முதல் எட்டு நாட்களும் பூசை செய்பவர் யார்?
கப்புகன்மார்

வைகாசி மாதச் சடங்கின் சிறப்பு யாது?
குளிர்த்தி பாடுதல்.
கண்ணகி வழக்குரை படித்தல்.
பெரிய உடுக்கு வாத்தியம் இசைக்கப்படுதல்.

இலங்கையில் கண்ணகி வழிபாடு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
முதலாம் கஜபாகு மன்னனால்

சிங்கள மக்களால் கண்ணகியம்மன் வழிபாடு எவ்வாறு அமைக்கப்படுகிறது?
பத்தினியம்மன் வழிபாடு என அழைக்கப்படுகிறது.

கண்ணாகியம்மனை வழிபடுவதனால் ஏற்படும் சிறப்புக்கள் எவை?
தீராத நோய்கள் நீங்கும்.
வேளாண்மை சிறக்கும்.
ஆடு, மாடுகள் பெருகும்.

உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயம்

உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயம் எங்கே அமைந்துள்ளது?
புத்தளம் மாவட்டத்தின் உடப்பு எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயச் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுக.
நாட்டார் வழிபாட்டு மரபிற்குரியது.
மகாபாரதக் கதையுடன் தொடர்புடையது.
பதினெட்டுத்தினங்கள் இச்சடங்கு மேற்கொள்ளப்படும்.
மகாபாரதம் தொடர்பான பதினெட்டுச் சம்வங்கள் ஆலய முன்றலில் நடித்துக் காட்டப்படும். சடங்குகள் பூசாரியினால் ஆற்றப்படுகின்றன.
தீ மிதிப்பு நடைபெறுகின்றன.
உடுக்கு, பறை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படும்.
கரகம், கும்மி முதலான கலைகள் வளர்க்கப்படும்.

முருகன் ஆலயம் – உகந்தை முருகன் ஆலயம்

உகந்தை முருகன் ஆலயம் எங்கே அமைந்துள்ளது?
அம்பாறை மாவட்டத்தில் உகந்தை என்னும் இடத்தில் உன்னங்கிரி என்னும் மலையில் அமைந்துள்ளது.

உன்னங்கிரியில் உள்ள மூன்று குன்றுகளும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சக்தி கிரி, வள்ளிகிரி, சந்நியாசிமலை என அழைக்கப்படுகின்றன.

சக்திகிரி மூலஸ்தானத்தில் எது காணப்படுகிறது?
முருகனது திரை காணப்படுகிறது.

சந்நியாசி மலை அடிவாரத்தில் காணப்படுவது எது?
விநாயகர் அமைந்துள்ளது.

வள்ளி மலையில் காணப்படுவது எது?
வள்ளியின் திருவுருவம் உள்ளது.

இவ்வாலய தீர்த்தம் எவ்வாறு காணப்படுகிறது?
ஏழு சுனைகளாக உள்ளன.

ஏழு கனைகளிலும் முக்கியமானைவ யாது?
சரவணப்பொய்கை, பாபநாசச் சுனை என்பன முக்கியமானது.

“உகந்தை” என அழைக்கப்பட்டதன் காரணம் யாது?
மகேந்திரபுரியில் சூரன்போரை நிகழ்த்திய பின், திருச்செந்தூர் திரும்பும் வழியில் “இவ்விடம் எமக்கு உகந்தது” என்று கூறி, முருகன் தங்கிய இடமாகையால் உகந்தை மலை எனப்பட்டது.

இங்கு பிரசாதமாக வழங்கப்படுவது யாது?
அவல்

இவ்வாலய தீர்த்தத்தின் சிறப்பு யாது?
ஏழு களைகளிலும் நீராடி, ஏழு ஜென்ம பாவங்களையும் அடியார்கள் நீக்குவர்.

இவ்வாலயத்திலுள்ள ஐதிகம் யாது?
வள்ளிகிரியை அண்மித்தாக கடல் காணப்படுகின்றது. கடலானது இரைச்சல், வள்ளிக்குத் துன்பம் தராதிருக்க கடலரசனை அமைதியாக இருக்கும்படி முருகன் கூறியதால், கடல் அமைதியாகக் காணப்படுகிறது என்பது ஐதீகம்.

இவ்வாலயத்திலுள்ள தடங்கள் எவை?
முருகனும் வள்ளியும் கதிர்காமத்திலிருந்து பயணஞ் செய்து வந்த தங்கத்தோணி, கடலோரத்தில் கல்லுருவாகிக் கவிழ்ந்து காணப்படுகிறது.
முருகனும், வள்ளியும் தங்கி ஓடியாடி விளையாடிய தடங்கள் காணப்படுகிறது.
வள்ளி மஞ்சள் தேய்த்துக் குளித்த தடங்கள் காணப்படுகிறது.

இவ்வாலய வருடாந்த உற்சவத்தின் சிறப்பு யாது?
கதிர்காமத் திருவிழாவுடன் தொடர்புடையது.
கதிர்காம யாத்திரை வரும் அடியார்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கிச் செல்வது வழமை.

கதிர்காமம்

கதிர்காமம் ஆலயம் அமைந்துள்ள இடம் யாது?
தென் இலங்கையில் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் வரலாற்றுச் சிறப்பு யாது?
புராதன முருகன் ஆலயம் (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது) புராதனமான பாதயாத்திரைத் தலம்.

இவ்வாலயம் பற்றி மகாவம்சம் கூறும் கருத்து யாது?
எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னன், இவ்வாலயத்தில் தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாலயத்தின் பூசைச்சிறப்புகள் எவை?
பூசாரி பக்தி சிரத்தையுடன் வாய்கட்டிப் பூசை செய்வார்.
திருவிழாக் காலங்களில் உள்ளிருக்கும் யந்திரத்தகட்டை, வெள்ளைத் துணியால் மூடி பேழையொன்றில் வைத்து யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்வர்.

இவ்வாலயத்தில் பூசை செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்?
கப்புறாளை என அழைக்கப்படுகின்றார்.

கதிர்காமத் தீர்த்தம் யாது?
மாணிக்க கங்கை

இவ்வாலயத்தில் உற்சவம் எப்போது நடைபெறுகிறது?
ஆடி மாதத்தில் நடைபெறுகிறது.

கதிர்காமம் செல்லும் அடியார்கள் வேறு எங்கு சென்று வருவார்கள்?
செல்லக்கதிர்காமத்திற்குச் சென்று வருவர்.

கதிர்காமக் கந்தனைக் “கற்பூரக்கந்தன்” என அழைப்பதற்கான காரணம் யாது?
இங்குள்ள பல அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்து தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதனால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.

கதிர்காமத் தலத்தைச் சிறப்பித்துப் பாடியவர்கள் யாவர்?
அருணகிரிநாதர்
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கதிர்காமத் தலத்தை எவ்வாறு பாடியுள்ளார்?
கதிரமலை காணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண் என் கண்ணே” எனப் பாடியுள்ளார்.

விஸ்ணு ஆலயம் – வல்லிபுர ஆழ்வார் ஆலயம்

இவ்வாலயம் எங்கு அமைந்துள்ளது?
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறைக்கு அண்மித்ததாக வல்லிபுரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக எது காணப்படுகிறன்றது?
சுதர்சன சக்கரம்

கதர்சன சக்கரத்தை நிறுவி வழிபட்டவர் யார்?
இலவல்லி என்னும் பெண்

இலவல்லி என்பவள் யார்?
பாரத நாட்டில் செல்வந்த குடும்பத்தில் வளர்ந்த இலவல்லி

இவளது தவத்தின் விளைவு யாது?
புத்திரப் பேறற்று வருந்தினாள். அவள் சிவனை நோக்கித் தவஞ் செய்தாள். சிவன் அவள் முன்தோன்றி “நீ ஈழநாட்டில் பிறப்பாய்; அங்கு திருமால் உன்னை ஆட்கொண்டு குழந்தைப் பேற்றினைத் தந்தருள்வார்” என்று கூறி மறைந்தார்.

சிவனது திருவருள்படி நடந்தது என்ன?
இலவல்லி பருத்தித்துறைப் பகுதியில் வல்லிபுரம் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்து. திருமணமாக திருமாலை வழிபட்டு வந்தால்.

இலவல்லிக்கு திருமால் எவ்வாறு அருனினார்?
இலவல்லி படகிலேறிக் கடலில் சிறிது தூரம் சென்றாள். அவ்வேளை கடலில் இருந்த மீனொன்று அவள் மடியில் பாய்ந்து குழந்தையாக மாறியது, கைகளில் சங்கு, சக்கரத்துடன் தோன்றிய அக்குழந்தையைப் பார்த்தவுடன் இலவல்லி தன் பூர்வீக பலனை நினைத்து மகிழ்ந்தாள்.

இவ்வாலயத்தின் அமைப்புப் பற்றிக் கூறுக?
நான்கு திசைகளிலும் நான்கு திருவாசல்கள் உள்ளன. கிழக்கு வாசலில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியபடி பூமாதேவி, ஸ்ரீதேவி சமேதராக விஷ்ணு வீற்றிருக்கின்றார்.

இவ்வாலய வருடாந்த மகோற்சவம் எப்போது தடைபெறுகின்றது?
புரட்டாதி மாத அமாவாசையில் தொடங்கும் மகோற்சவம் பதினேழு தினங்கள் நடைபெறும்.

இவ்வாலய திருவிழாவின் விசேடமானது எது?
மகோற்சவத்தின் 16 ஆம் நான் நடைபெறும் சமுத்திர தீர்த்தம் மிக விசேடமானது.

ஈழத்து ஆலயங்கள் வினா விடை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button