ஆலய வழிபாடு வினா விடை

சைவ சமய வழிபாடு சிறப்புப் பெறுவதற்கான காரணம் யாது?
அறிவியல் ரீதியானவை.
உயர்ந்த பயனுடையவை.

ஆலய வழிபாட்டின் அறிவியலில் சுத்தம் பெறும் முக்கியம் யாது?
ஆலயத்திற்குச் செல்லும்போது நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து செல்வதும், ஆலயத்துள்ளே செல்லும் முன் கை, கால் கழுவிச் செல்வதும் நாமும் நமது சூழலையும் சுத்தமாக விளங்குவதற்கு அடிப்படையாக அமைகின்றது.

ஆலய வழிபாட்டின் அறிவியலில் உடல் ஆரோக்கியம் பெறும் முக்கியம் யாது?
ஆலயத்தை மூன்று அல்லது ஐந்து முறை வலம் வரும்போது உடலை இயக்கும் நரம்புகளின் முடிச்சுக்கள் தூண்டப்படும். ராகம்
மனமும், உடலும் இறுக்கம் நீங்கித் தளர்வடையும்.
உடலின் ஆறு ஆதாரங்களின் சமநிலையும் பேணப்படும்.
இறைவனை இருகரங்களையும் கூப்பி வழிபடும்போது தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு ஆகியவை பலமடையும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும், மற்றும் கூப்பிய கையிலேதான் பிரபஞ்ச சக்தியும் உள்ளீர்க்கப்படுகின்றது.
விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவதனால் சிரசிற்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் சிறப்பாக அமைகின்றது.
நமஸ்காரங்கள் செய்வதால் மார்புக்கும் மேலுள்ள உறுப்புக்களுக்கும், சுவாசத்திற்கும் சிறந்த பயிற்சியாக அமைகிறது.
தலவிருட்சங்களை வலம் வரும்போது அவற்றிலிருந்து வெளியேறும் மூலிகைக் காற்றானது எமது உடலிற்கு மிகுந்த ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

உடலின் ஆறு ஆதாரங்களும் எவை?
மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை

தோப்புக்கரணம் எவ்வாறு போடப்பட வேண்டும்?
இடது கையினாலும் பிடித்துத் தோப்புக்கரணம் போடப்படுகிறது.

ஆலயத்தில் செய்யும் நமஸ்காரங்கள் எவை?
அட்டாங்க நமஸ்காரம்
பஞ்சாங்க நமஸ்காரம்

ஆலயங்களின் தலவிருட்சங்கள் எவை?
அரசு, ஆல், வேம்பு, மா, வன்னி, வில்வம் முதலான மரங்கள்

ஆலயக் கிரியைகளில் ஹோமங்களில் காணப்படும் அறிவியல் யாது?
ஆலயக் கிரியைகளில் ஹோமங்கள் நடைபெறுகின்றன. அவற்றிற்கு அரசு, மா, பலா, ஆல், எருக்கலை போன்ற மூலிகைப் பொருட்கள் இடப்படுகின்றன. இவற்றின் புகையும் கர்ப்பூரம் எரிக்கப்படும்போது வெளிவரும் புகையும் மணமும் சூழலைத் தூய்மையாக்குகின்றன. இவை சுவாசிப்பதற்கும், நோய் தீர்ப்பதற்கும் மருந்தாக அமைகின்றன.

ஆலயங்கள் பெரும்பாலும் எவ்விடயங்களில் அமைக்கப்படுகின்றன?
மின்காந்த அலைகள் அதிகம் இருக்கும் இடங்களிலேயே அமைக்கப்படுகின்றன.

கலசங்கள் ஆலயங்களில் எங்கே அமைக்கப்படுகின்றன?
விமானங்கள், கோபுரங்களில் அமைக்கப்படுகின்றன.

கலசங்களின் தன்மை யாது?
மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளன.

ஆலயத்தில் கலசங்கள் காணப்படுவதனால் ஏற்படும் நன்மை யாது?
ஆலயத்தினுள் சென்று வழிபடும்போது காந்த சக்தி உடலில் சேர்கிறது. இதனால் புத்துணர்வு, உள்ளத்தூய்மை, நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது.

சம்பந்தரும், அப்பரும் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம் யாது?
திருமறைக்காட்டிலுள்ள கோயிலின் கதவு தாழிடப்பட்டு எவராலும் திறக்கப்பட முடியாதிருப்பதை அறிந்தனர். இரு குரவர்களும் இறைவனைத் துதித்து திருநாவுக்கரசர் கதவு திறக்கப் பாடியருளினார், சம்பந்தர் கதவை அடைக்கப் பாடினார்.

ஆலய வழிபாடு வினா விடை

Exit mobile version