சமயம்

அப்பர் தேவாரம் வினா விடை

”உழவர் படையாளி” எனப் போற்றப்படும் நாயனார் யார்?
(அப்பர்) திருநாவுக்கரசு நாயனார்

நாம் எவ்வாறு இறைவன் திருவுள்ளத்திற்கு உவந்த தொண்டர்களாக முடியும்?
நாம் எவ்வளவு மனம் உருகி உருகி இறைவனை வணங்குகின்றோமோ, அவ்வளவுக்கு இறைவனுடன் ஒன்றுபடுகிறோம்.

அப்பர் தனது வழிபாட்டு மார்க்கமாக எதனைக் கடைப்பிடித்தார்?
சரியைத் தொண்டை

அப்பர் எங்கே சில காலம் தங்கியிருந்தார்?
திருமருகல் என்ற தலத்தில்

சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த பதி எது?
திருச்செங்காட்டங்குடி

திருமருகலில் உறையும் இறைவன், இறைவி பெயர் யாது?
இறைவன் – மாணிக்க வண்ணப் பெருமான்
இறைவி – குழலி அம்மையார்

“பெருகலாம் தவம் பேதைமை…..” என்ற தேவாரத்தினை பாடியவர், தலம், சந்தர்ப்பம் என்பவற்றைத் தருக.
பாடியவர் – அப்பர் சுவாமிகள்
தலம் – திருமருகல்
சந்தர்ப்பம் – திருமருகல் தலத்தில் சில காலம் தங்கியிருந்த அப்பர் திருச்செங்காட்டங்குடியினைப் போற்றிப் பாடிப் பின் திருமருகலில் உறையும் இறைவன், இறைவியையும் பாடிப் பரவினார்.

“பெருகலாம் தவம்…..” என்ற தேவாரத்தை அடிமுறை பிழையாது எழுதுக.
திருச்சிற்றம்பலம்
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சந்தை திருந்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
திருச்சிற்றம்பலம்

நாம் தவத்தில் எவ்வாறு மேம்படலாம் என அப்பர் சுவாமிகள் கூறுகின்றார்?
திருமகள் பெருமானுடைய திருவடிகளை வாயினால் வாழ்த்தி, உடம்பினால் வணங்கின. மாத்திரத்தே தவத்தில் மேம்படலாம்.

திருமருற் பெருமானை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் எவை?
தவத்தில் மேம்படலாம்.
அறியாமை நீங்கப் பெறலாம்.
மாறுபட்ட மனத்தைத் திருத்திக் கொள்ளலாம்.
சிவனாந்தமாகிய தேனை உண்டு அனுபவிக்கலாம்.

சம்பந்தரும், அப்பரும் எங்கே படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கினார்?
திருவீழிமிழலையில்

திருவீழிமிழலையில் பஞ்சம் போக்கிய பின்னர் இருவரும் எங்கு சென்றனர்?
திருமறைக்காட்டிற்குச் சென்றனர்.

சம்பந்தரும், அப்பரும் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம் யாது?
திருமறைக்காட்டிலுள்ள கோயிலின் கதவு தாழிடப்பட்டு எவராலும் திறக்கப்பட முடியாதிருப்பதை அறிந்தனர். இரு குரவர்களும் இறைவனைத் துதித்து திருநாவுக்கரசர் கதவு திறக்கப் பாடியருளினார், சம்பந்தர் கதவை அடைக்கப் பாடினார்.

கதவு திறக்கவும், அடைக்கவும் பாடியமை உணர்த்தும் இறைதன்மை யாது?
இறைவன் அடியார்க்கு எளியவன் என்பதும், அடியார்களின் தூய விருப்பங்களை நிறைவேற்றுபவன் என்பதுவும் வெளிப்படுகின்றன.

எமக்குக் கிடைக்கும் படிப்பினை யாது?
நாமும் இறைவனை அன்போடு வழிபட்டு வளமாக வாழ்வோமாக.

“மண்ணின் நேர் மொழியான்…” என்ற தேவாரம் எதில் இடம்பெறுகிறது?
திருக்குறுந்தொகை

“மண்ணின் நேர் மொழியான்……” என்ற தேவாரத்தினைப் பாடியவர், தலம், சந்தர்ப்பம் என்பவற்றைத் தருக?
பாடியவர் – அப்பர் சுவாமிகள்
தலம் – திருமறைக்காடு
சந்தர்ப்பம் – அடைப்பட்ட கதவு திறக்கப் பாடியமை.

திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் இறைவன், இறைவியின் சிறப்பு யாது?
இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவியாரை இடப்பாகமாகக் கொண்டும், பூமியில் உள்ளவர்கள் வலம் செய்து வணங்குவதற்குரியவராகவும் விளங்குகின்றனர்.

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் வினா விடை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button