சைவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் எவை?
-
-
- விரதங்கள்,பண்டிகைகள், விழாக்கள்
-
விரதங்கள், பண்டிகைகள், விழாக்கள் என்பன எவற்றுக்கு வழிவகுக்கின்றன?
-
-
- மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும் சமூகத்தவருடன் நல்லுறவை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கின்றன.
-
“நாள் மங்கலம்” என்பது எதனைக் குறிக்கிறது?
-
-
- பிறந்தநாளைக் குறிக்கிறது
-
“நாள் மங்கலம் ” என்பதன் பொருள் யாது?
-
-
- நாள் என்பது நட்சத்திரத்தையும், மங்கலம் என்பது நன்மை தருவது எனவும், பொருள் கொண்டு, “நாம் ஒவ்வொருவரும் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாள், நமக்கும், பிறருக்கும், நன்மை தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும்.
-
நாள் மங்கல நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் எக்காலத்தில் காணப்பட்டது?
-
-
- சங்ககால இலக்கியங்களில்
- சோழர்கால இலக்கியங்களில்
-
நாள் மங்கலத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய சோழ மன்னன் யார்?
-
-
- இராஜராஜசோழன்
-
இராஜராஜசோழன் தனது பிறந்தநாளின் போது எவற்றைச் செய்தார்?
-
-
- கோயில்களுக்கு மானியங்கள் வழங்கினான்.
-
இராஜராஜசோழன் மானியங்கள் வழங்கியமையினை எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது?
-
-
- அக்காலக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
-
நாள் மங்கலம் யார் யார்க்கெல்லாம் நன்றிக்கடன் செலுத்தும் விழாவாகும்?
-
-
- இறைவனுக்கு, பெற்றோருக்கு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்கள். எனவே நாம் பிறந்த தினம் (நட்சத்திர நாள்) நன்றி செலுத்தும் நாளாக அமைய வேண்டும்.
-
பிறந்தநாள் அன்று செய்ய வேண்டிய கடமைகள் எவை?
-
-
- நீராடி, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, பெரியோரிடம் ஆசீர்வாதம் பெற்று, வீட்டில் பூரண கும்பம் வைத்து, விளக்கேற்றி தோத்திரப்பாடல்கள் பாடி நிறைந்த கல்வியையும் நோயற்ற வாழ்வையும் வேண்டி இறைவனை மனதாரக் கும்பிடுவோம், நண்பர்கள், உறவினர்கள், பெரியோர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்வோம்.
-
குழந்தை பிறந்ததும் முதலில் மகிழ்பவர்கள் யார் ?
-
-
- பெற்றோர்கள்
-
ஒரு பிள்ளையின் வளர்ச்சியின் கரிசனை செலுத்துவோர் யாவர்?
-
-
- பெற்றோர், பாடசாலைச் சமூகம்
-
எமக்குத் தேவையானவை பிறரிடம் இருந்து கிடைக்கப் பெறுவதனால் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும்?
-
-
- நம்மைச் சூழ உள்ளவர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடையும் வண்ணம் நாம் காரியங்களைச் செய்ய வேண்டும்.
-
யாரோடு மங்கலநாள் நிகழ்வைச் செய்ய வேண்டும்?
-
-
- வறியவர்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் கொண்டாடுவது சிறப்பானதாகும்.
-
நாள் மங்கலமன்று செய்யத் தகாதவை / குற்றங்களாகக் கருதப்படுபவை எவை?
-
-
- ஆடம்பரமாகக் கொண்டாடிப் பணத்தை விரயம் செய்யக் கூடாது. மேலைநாட்டுப் பண்பாடு போன்று எமது பிறந்தநாளை செய்யக்கூடாது. தீபத்தை வாயால் ஊதி அணைக்கலாகாது.
-
நாள் மங்கலத்தை சைவர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும்?
-
-
- தான தருமங்கள் செய்ய வேண்டும்.
- தீபத்தை ஏற்ற வேண்டும்.
- இறைவனை வழிபட வேண்டும்.
- புண்ணிய காரியங்களைச் செய்து நாமும் மகிழ்வோம், பிறரையும் மகிழ்விப்போம்.
-