சமயம்

நாள் மங்கலம் வினா விடை

சைவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் எவை?

      • விரதங்கள்,பண்டிகைகள், விழாக்கள்

விரதங்கள், பண்டிகைகள், விழாக்கள் என்பன எவற்றுக்கு வழிவகுக்கின்றன?

      • மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும் சமூகத்தவருடன் நல்லுறவை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கின்றன.

“நாள் மங்கலம்” என்பது எதனைக் குறிக்கிறது?

      • பிறந்தநாளைக் குறிக்கிறது

“நாள் மங்கலம் ” என்பதன் பொருள் யாது?

      • நாள் என்பது நட்சத்திரத்தையும், மங்கலம் என்பது நன்மை தருவது எனவும், பொருள் கொண்டு, “நாம் ஒவ்வொருவரும் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாள், நமக்கும், பிறருக்கும், நன்மை தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும்.

நாள் மங்கல நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் எக்காலத்தில் காணப்பட்டது?

      • சங்ககால இலக்கியங்களில்
      • சோழர்கால இலக்கியங்களில்

நாள் மங்கலத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய சோழ மன்னன் யார்?

      • இராஜராஜசோழன்

இராஜராஜசோழன் தனது பிறந்தநாளின் போது எவற்றைச் செய்தார்?

      • கோயில்களுக்கு மானியங்கள் வழங்கினான்.

இராஜராஜசோழன் மானியங்கள் வழங்கியமையினை எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது?

      • அக்காலக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

நாள் மங்கலம் யார் யார்க்கெல்லாம் நன்றிக்கடன் செலுத்தும் விழாவாகும்?

      • இறைவனுக்கு, பெற்றோருக்கு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்கள். எனவே நாம் பிறந்த தினம் (நட்சத்திர நாள்) நன்றி செலுத்தும் நாளாக அமைய வேண்டும்.

பிறந்தநாள் அன்று செய்ய வேண்டிய கடமைகள் எவை?

      • நீராடி, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, பெரியோரிடம் ஆசீர்வாதம் பெற்று, வீட்டில் பூரண கும்பம் வைத்து, விளக்கேற்றி தோத்திரப்பாடல்கள் பாடி நிறைந்த கல்வியையும் நோயற்ற வாழ்வையும் வேண்டி இறைவனை மனதாரக் கும்பிடுவோம், நண்பர்கள், உறவினர்கள், பெரியோர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்வோம்.

குழந்தை பிறந்ததும் முதலில் மகிழ்பவர்கள் யார் ?

      • பெற்றோர்கள்

ஒரு பிள்ளையின் வளர்ச்சியின் கரிசனை செலுத்துவோர் யாவர்?

      • பெற்றோர், பாடசாலைச் சமூகம்

எமக்குத் தேவையானவை பிறரிடம் இருந்து கிடைக்கப் பெறுவதனால் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும்?

      • நம்மைச் சூழ உள்ளவர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடையும் வண்ணம் நாம் காரியங்களைச் செய்ய வேண்டும்.

யாரோடு மங்கலநாள் நிகழ்வைச் செய்ய வேண்டும்?

      • வறியவர்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் கொண்டாடுவது சிறப்பானதாகும்.

நாள் மங்கலமன்று செய்யத் தகாதவை / குற்றங்களாகக் கருதப்படுபவை எவை?

      • ஆடம்பரமாகக் கொண்டாடிப் பணத்தை விரயம் செய்யக் கூடாது. மேலைநாட்டுப் பண்பாடு போன்று எமது பிறந்தநாளை செய்யக்கூடாது. தீபத்தை வாயால் ஊதி அணைக்கலாகாது.

நாள் மங்கலத்தை சைவர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும்?

      • தான தருமங்கள் செய்ய வேண்டும்.
      • தீபத்தை ஏற்ற வேண்டும்.
      • இறைவனை வழிபட வேண்டும்.
      • புண்ணிய காரியங்களைச் செய்து நாமும் மகிழ்வோம், பிறரையும் மகிழ்விப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button