சமயம்

திருஞானசம்பந்தர் தேவாரம் வினா விடை

  1. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் பக்திச் சிறப்பு யாது?
    • மூன்று வயதில் ஞானப்பால் உண்டு தேவாரம் பாடியவர். சிவபெருமானே எல்லா உயிர்க்கும் தஞ்சம் என்று உணர்ந்தவர். சிவனை வழிபட பல தலங்களுக்கும் யாத்திரையாகச் சென்றவர். பண்ணோடு தேவாரம் பாடி, இறைவனைத் துதித்தவர்.

2. கோயில் என்று சிறப்பித்துக் கூறப்படுவது எது?

    • சிதம்பரம்

3. “கற்றாங்கு எரியோம்பிக்…..” என்ற தேவாரத்தைப் பாடியவர், பண், தலம், சந்தர்ப்பம் என்பவற்றைத் தருக.

    • பாடியவர் – திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
    • தலம் – சிதம்பரம் (கோயில்)
    • பண் – குறிஞ்சி
    • சந்தர்ப்பம் – சம்பந்தர் சிதம்பரத்தை அடைந்து, ஆலயத்தினுள் சென்று திருவீதி உலா வந்து, அங்கே அனவரதமும் ஆனந்தத் திருக்கூத்தாடும் அம்பலத்தரசனைக் கும்பிட்டு எழுந்து, மகிழ்ச்சி பொங்கப் பாடியமை.

4. “கற்றாங்கு எரியோம்பிக்…..” என்ற தேவாரத்தை வரிக்கிரமமாக எழுதுக?

    • திருச்சிற்றம்பலம்
      கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
      செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
      முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
      பற்றா நின்றாரைப் பற்றிபாவமே.
      திருச்சிற்றம்பலம்

5. தில்லையிலே வாழ்கின்ற அந்தணர்கள் எதனைச் செய்கின்றனர்?

    • வேதாகமங்களில் கற்றபடி தீ வளர்த்து, வேள்விகளைச் செய்து, நாட்டிலே துன்பங்கள் வராதபடி காக்கின்றனர்.

6. சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் நாமம் யாது?

    • சிற்றம்பலநாதர்

7. சிற்றம்பலநாதரின் சிறப்புக்கள் எவை?

    • இளம்பிறையைத் தனது சடாமுடியில் தாங்கியபடி எழுந்தருளியிருப்பவர்.
    • மூவுலகிற்கும் முதல்வர்
    • எம்பெருமானின் தூக்கிய திருவடியைப் பற்றிக் கொண்டவர்களைப் பாவங்கள் பற்றி வருத்தாது.

8.மதுரையிலே பாண்டிய மன்னனைச் சமண சமயத்திலிருந்து மீட்டெடுத்து சைவனாக்கியவர் யார்?

    • சம்பந்தர்

9.சம்பந்தர் பாண்டிய மன்னனுக்கு எதன் மகிமையை விளக்கினார்?

    • திருநீற்றின் மகிமையை விளக்கினார்

10. சம்பந்தர் தந்தையாரைக் கண்டதும் யாரைச் சிந்தித்தார்?

    • தோணியப்பரதும், பெரியநாயகியரதும் திருவடிகளைச் சிந்தித்தார்.

11.இறைவன் இறைவியை எவ்வாறு நினைத்து “மண்ணில் நல்ல வண்ணம்” என்ற பதிகத்தைப் பாடினார்?

    • “என்னை அறியாப் பருவத்தே ஆட்கொண்ட பெருந்தகை எம்பெருமாட்டியுடன் இருந்ததே” என்று நினைத்தார்.

12. “மண்ணில் நல்ல வண்ணம்…” என்ற பதிகத்தினைப் பாடியவர், தலம், பண், சந்தர்ப்பம் என்பவற்றைத் தருக.

    • பாடியவர் – சம்பந்தர்
    • தலம் – திருக்கழுமலம்
    • பண் – கொல்லி
    • சந்தர்ப்பம் – சம்பந்தர் தனது தந்தையாரைக் கண்டதும் தோணியப்பரதும், பெரிய நாயகியாரதும் திருவடிகளைச் சிந்தித்து “என்னை அறியாப் பருவத்தே ஆட் கொண்ட பெருந்தகை எம்பெருமாட்டியுடன் இருந்ததே” என நினைத்துப்
      பாடியமை.

13. மண்ணில் நல்ல வண்ணம்….” என்ற பதிகத்தை வரிக்கிரமமாக எழுதுக.

திருச்சிற்றம்பலம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை
கண்ணில் நல்லஃது உறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
திருச்சிற்றம்பலம்

14. திருக்கமலத்தின் சிறப்பு யாது?

எங்கு பார்த்தாலும் கண்ணில் நல்ல காட்சியே படுகின்ற, செழிப்புமிக்க நகர் திருக்கழுமலம்.

15. திருக்கழுமலத்தில் வீற்றிருக்கும் இறைவன், இறைவியின் பெயர் யாது?

    • இறைவன் – திருத்தோணியப்பர்
    • இறைவி – உமாதேவியார்

16. சம்பந்தர் திருத்தோணியப்பரின் அருட்சிறப்பு யாது எனக் கூறுகின்றார்?

    • திருத்தோணியப்பரை வணங்குகின்றவர்கள் இப் பூவுலகில் யாவரும் போற்ற வாழும் வாழ்வு உண்டாகும்.
    • மறுமையிலும் நல்ல முத்திப்பேற்றுக்கு சிறிதளவேனும் குறைவு உண்டாகாது.

திருஞான சம்பந்தர் தேவாரம் வினா விடை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button