பெண்ணோடு உல்லாசம் அனுபவித்த பெளத்த பிக்கு சிக்கினார்!

கொழும்பு, நுகேகொடை பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் பிக்கு ஒருவர் பெண் ஒருவரோடு சாதாரண உடையில் வாகனத்தில் இருந்தபோது விகாரைக்கு பங்களிப்பு செய்யும் மக்களிடம் சிக்கியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று நடந்துள்ளதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அப்போது அங்கிருந்தவர்கள் பிக்குவை தாக்க முயற்சித்துள்ளனர். எனினும் அவர் பிக்கு என்பதால் தாக்க வேண்டாம் என அருகில் இருந்த ஏனையோர் கூறுகின்றனர். பிக்கு என்பதால் தாக்க மாட்டோம் என அவர்கள் கூறுகின்றனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதோடு பிக்குவையும் வாகனத்தில் இருந்த பெண்ணையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பிக்கு கெமராவில் தனது முகம் தெரியாதபடி கைகளால் முகத்தை மூடி கொண்டதோடு பின் தனது சட்டையால் முகத்தை மூடும் காட்சிகளும்  காணொளியில் காணமுடிகிறது.

இந்த பௌத்த பிக்குவிடம் பிக்கு அடையாள அட்டையும் சாதாரண நபர்களுக்கான தேசிய அடையாள அட்டையும் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

இவ்வாறன பிக்குகளே பௌத்த சாசனத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version