இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க இந்தியா இணக்கம்!

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலரினை கடனாக வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் தொகையினை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியிருந்தது.

இக்கோரிக்கைக்கு இந்திய அக்சு அனுமதி வழங்கியுள்ளது.

இக் கடனுதவியானது நாட்டின் மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமென அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இக்கடன் தொகையினை வைத்து எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியுமெனவும் அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும், நிதிஅமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கடன் தொகை தொடர்பிலான விபரங்கள் பேசப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கடன் உதவியினை இந்தியா வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version