இருவரும் இலங்கை பெண்கள், ஆனாலும் ஏன் இந்த பாகுபாடு?

இலங்கையை சேர்ந்த இரு யுவதிகள் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் யூடியூப்பில் பாடலை பாடி வெளியிடும் யுவதி. யூடியுப்பில் பாடல்கள் பலவற்றை பாடி வெளியிட்ட போது ஒரு பாடல் பல கோடி பார்வையாளர்களை பெற்றது. இதனை அடுத்து இலங்கை அரசினால் கெளரவிக்கப்பட்டு பல கோடி பெறுமதியான காணியும் வீடும் அரசா; பரிசாக வழங்கப்பட்டது.

அவ்வாறு அரச மரியாதையையும் பரிசையும் பெற்றவர்தான் யொஹானி டி சில்வா.

இதேசமயம் மற்றைய யுவதி கணேஸ் இந்துகாதேவி. பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.

ஆனால் அவருக்கு அரசினால் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார்.

பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கிய இந்த அரசாங்கம் , நாட்டை கௌரவப்படுத்தி தங்க பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தமது ஆதங்கங்களை  வெளியிட்டுள்ளானர்.

இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கிற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய இந்த அரசாங்கம் , மற்றையவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன், இவர் தமிழ் மொழி பேசுபவர் என்பதனலா என கேள்வியும்  எழுப்பப்பட்டுள்ளது.

தங்க பதக்கம் பெற்ற கணேஸ் இந்துகாதேவிக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களோ, எந்த முக்கியஸ்தர்களோ வாழ்த்துக்களை கூறவில்லை என  தெரிவிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version