உலகம்
மசகு விலை அதிகரிக்கும் சாத்தியம்
மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 100 டொலர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு கடந்த 7வருடத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்விலை, விரைவில் 100 டொலரை தாண்டுமென சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2014ம் ஆண்டு செப்டெம்பர் தொடக்கம் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை எட்டவில்லை. எனினும் இந்த ஆண்டு தற்போது வரையான காலத்தில் ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 15 சதவீதத்தினால் அதிகரித்து 88 டொலராக உள்ளது.
அவ்வாறே, அமெரிக்க டபிள்யூ.ரீ.ஐ மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 14 சதவீதத்தினால் அதிகரித்து 85.55 டொலராக உள்ளது.