பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச குத்துசண்டை போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்க பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.
தந்தையை இழந்தநிலையில் தாயின் அரவணைப்பில் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச குத்துச் சண்டையில் போட்டியில் பங்குகொள்ள தெரிவாகிய நிலையில் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.
பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற 25 வயதிற்கு உட்பட்ட 50-55 கிலோகிராம் எடை பிரிவின் நேற்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கத்தினை வென்று நாட்டிற்கு பெருமை தேடிதந்துள்ளார்.