உலகம்
2022 தொடக்கத்தில் இதுவரை 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!
வடகொரியா இன்று இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனைசெய்துள்ளது.
ஜப்பானியகடல் பகுதிக்கருகில் உள்ள கடலில் வடகொரியா இரு ஏவுகணைகளை ஏவியது. இம்மாதத்தில் மட்டும் இது 4வது முறையாக செய்யப்படும் ஏவுகணை சோதனை ஆகும்.
வடகொரியாவின் இந்தசோதனை குறித்து முதலில் தென்கொரியாவின் இராணுவம் அறிவித்தது, அதன்பின் ஜப்பானால் உறுதி செய்யப்பட்டது.
இன்று சோதனைசெய்யப்பட்ட ஏவுகணைகள் ‘ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆகும்.
இவை ஒலியின் வேகத்த்தை போல 5 மடங்கு வேகமாக பயணிக்குமெனவும், இவை ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்படுவதாகவும் வடகொரிய அரசஊடகம் கூறியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை அடுத்து தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியாவின் அடுத்த நகர்வுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாக தெரிவித்தனர்.