நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்னணி நடிகரான தனுஷ் 2004ல் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம்செய்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி தமது பிரிவை அறிவித்து சில மணிநேரத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரியான சவுந்தர்யாவின் டுவிட்டரில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தந்தை ரஜினிகாந்துடன் தானும், ஐஸ்வர்யாவும் இருக்கும் இளம்வயது புகைப்படத்தை ப்ரோபைல் பிக்சராக மாற்றி உள்ளார்.
தந்தை ரஜினிகாந்துக்கு துணையாக நாமிருவரும் எப்போதும் இருப்போம் என்பதை கூற முனைவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.