கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற நபர் 12கோடிக்கு அதிபதியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அய்மனானம் எனும் கிராமமுள்ளது . அங்கு வாழ்ந்துவரும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன்.
நேற்று காலையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டுஒன்றை வாங்கியுள்ளார். சீட்டை வாங்கிய அன்றே சிலமணி நேரங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்ட குலுக்கலின் மூலமாக 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இது ழ்தொடர்பில் பரிசுவென்ற சதானந்தன் கூறுகையில்,
கடந்த 50வருடங்களாக பெயின்டிங் வேலை செய்து வருகிறேன். ஞாயிற்றுகிழமை என்பதால் காலை இறைச்சி வாங்க சந்தைக்கு சென்றேன். அப்போது சரி ஒருலாட்டரி டிக்கெட் வாங்கலாமென லாட்டரி விற்பவரிடம் ஒருசீட்டை வாங்கினேன். அதுதற்போது என்னுடைய வாழ்வில் ஒட்டு மொத்தமாக மாற்றியுள்ளது. என் மகிழ்ச்சியினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என மகிழ்ச்சியோடு கூறினார்.