1,700 அத்தியாவசிய பொருட் கொள்கலன்கள் துறைமுகத்தில்!

இலங்கையில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பொருட்களடங்கிய 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரு மாதங்களுக்கு மேலாக தேங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பலசந்தர்ப்பங்களில் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் எனினும் இதுவரை உரியதீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிகிடக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க முடியாத காரணத்தால் நாட்டில் பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

வர்த்தக அமைச்சருடன் எதிர்வரும் 18ம் திகதி கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version