கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை செய்த தனியார் வைத்தியசாலை!

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணிவைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமென சட்டமருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தபெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரியவிசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார்மருத்துவனையில் (RUHBINS HOSPITAL)
சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமிதொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடலில்துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமிதொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக்கு காரணமென சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம்தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு, தனியார் மருத்துவமனையில் பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்டமருத்துவ அதிகாரி உள்ளிட்டோரை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Exit mobile version