ரணிலின் கோரிக்கையினை ஏற்றது அரசு!

9வது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு ஜனவரி 18ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் ஜனாதிபதி சிம்மாசன உரையின் பின்னர் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படுமென அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றுகூடிய அரசியல்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கானமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி சபையில் உரையாற்றியதை தொடர்ந்து, ஒத்திவைப்பு விவாதத்திற்கு முன்னாள்பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன மற்றும் அமைச்சர் தினேஸ்குணவர்தன ஆகிய இருவருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,இது 1978 அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறையாகும் என்றுஅவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னதாக அரசியலமைப்பின் 70 வது சரத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி ஒரு விசேடவர்த்தமானி அறிவிப்பின் மூலம்டிசம்பர் 12, 2021 அன்று நள்ளிரவில் இருந்து நாடாமன்றத்தை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இதன்படி, அரசியல் கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின் இந்த ஒத்திவைப்பு விவாதத்தை ஜனவரி 19, 20 மற்றும் தேவைப்பட்டால் 21 ஆம் திகதிக்கு ஒதுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Exit mobile version