கறுப்பினப் பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்றினை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
கறுப்பினப் பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தினை அமெரிக்கா வெளியிடுவது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும்.
பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயாஏஞ்சலோ என்பவர் தன்னுடைய சுயசரிதையினால் பிரபலம் ஆனவர்.
அமெரிக்காவில் சர்ச்சையினை ஏற்படுத்திய அந்தபுத்தகத்தில், சிறுவயதில் தான் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதன்தாக்கம் தொடர்பில் விரிவாக எழுதியிருந்தார்.
தன்னுடைய 86வயதில் 2014ம் ஆண்டில் இறந்தார். இதற்கிடையில், மாயா ஏஞ்சலோவின் நினைவாக இப்பொழுது கால் டாலர் மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.