புலம்பெயர்ந்து வருவோருக்கு கனடா பிரதமரின் மகிழ்சியான அறிவிப்பு!
2021ம் ஆண்டில் கொரோனா தொற்றினால் வேலை இழந்தவர்களுக்கு மீளவும் வேலை கிடைத்ததை போல அன்றி, இவ்வாண்டில், கனடாவுக்கு புதிதாக வருபவர்களுக்கு பெரும் அளவில் வேலைகளை வழங்குவதற்கு திட்டம் இடப்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவமாணவிகள் கனடாவிற்கு திரும்ப துவங்கி உள்ள நிலையில், கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, இவ்வாண்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையினை புதிய மட்டத்திற்கு உயர்த்துவதற்கு திட்டம் இட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் 57,400பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பளித்து தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கியது கனடா. அதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 6% இருந்த வேலை இல்லாமை வீதமானது, 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் 5.9% ஆக குறைந்தது.
பகுதிநேர வேலை பார்த்துவந்த பலர் நிரந்தர வேலைகளுக்குத் திரும்ப, முழுநேர வேலைகளின் எண்ணிக்கை 1,23,000ஆக உயர்ந்தது.
சென்றஆண்டில் கொரோனா கால கட்டத்தில் வேலை இழந்தவர்கள் வேலைக்குத் திரும்பியதைபோல இல்லாமல், இவ்ஆண்டில், புதிதாக புலம்பெயர்ந்து வருவோருக்கு பெருமளவில் வேலைவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து, குறைந்திருந்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கை, கடந்தசில மாதங்களாக கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய நிலையை எட்டிவருகிறது.
குறிப்பாக, முறையானதொழில், அறிவியல் சார்ந்த மற்றும் தொழில்நுட்பசேவை பிரிவுகளில் அதிகம்பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் (சுமார் 26,000 பேர்). அதேபோல், மொத்த வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
அதாவது, தொழிலாளர் சந்தையில் புதியவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில், உயர்திறன் பணியாளர்கள் மட்டுமல்லாமல், தாழ்திறன் பணியாளர்களும் பங்கெடுப்பதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
கனடாவின் முக்கியபுதிய புலம்பெயர்தல் வழிமுறையான எக்ஸ்பிரஸ் நுழைவு உயர்திறன் பணியாளர்களை இலக்காக வைக்கும்போது, மாகாண நாமினிதிட்டம் முதலான மற்ற வழிமுறைகள் தாழ்திறன் பணியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன.
அதாவது, தொழில்முறைக் கல்விகற்றவர்களுக்கு மட்டுமின்றி, மற்றபணி செய்வோருக்கும் வேலை வாய்ப்பளிப்பதற்கான வழிமுறைகள் கனடாவில்உள்ளன என்பது அதன்பொருள்.
கனடா 2021ஆம் ஆண்டில் இலக்கான 401,000 புதிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றோர் என்னும் இலக்கை அடைந்துவிட்ட நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, 2022ஆம் ஆண்டில் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆக, ஆண்டுக்கு ஆண்டு, கனடாவில் பணி பெறும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது!