நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, கம்பஹா மாவட்டம் பியகமவில் உள்ள நாணயத் தாள்களை அச்சிடும் தொழிற்சாலையில் இடைவிடாது பணத்தை அச்சிட்டு வருகிறார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை ரூபா நாணயத்தாள்களை போதுமான அளவுக்கு அச்சிட முடிந்தாலும் அமெரிக்க டொலர்களை அப்படி அச்சிட முடியாது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
தற்போதைய அரசாங்கத்திடம் சரியான முகாமைத் துவம் இல்லாததே இதற்கான பிரதான காரணம்.
அரசாங்கம் எடுக்கும் அரசியல் தீர்மானங் களில் தவறிழைத்துள்ளது. அரச நிர்வாக முகாமைத்துவத்தில் தவறிழைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார உற் பத்தியில் தவறிழைத்துள்ளது. சர்வதேச தொடர்புகள் சம்பந்த மான முகாமைத்துவதிலும் தவ றியு ள்ள து . இவை அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டியவை.
பசளை நெருக்கடி, வைத்தியசாலை களில் மருந்து தட்டுப்பாடு பற்றித் தற்போது பேசுகின்ற னர். மருந்தகங்களிலும் மருந்து இல்லை.
பொருளாதா ரப் பிரச்சினையையும் டொலர் நெருக்கடியையும் எப்படி தீர்ப் பது. பஸில் ராஜபக்ச பியமக தொழிற்சாலையில் இடை விடாது பணத்தை அச்சிடுகிறார்.
நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்தேன். ரூபா நாணயத் தாள்களை போதுமான அள வுக்கு அச்சிட்டு வெளியிட முடி யும்.
எப்படி டொலர் கிடைக்கும். உலகம் நாட்டை ஆட்சி செய்பவர்களின் பதவிகள் முகங்களை பார்த்து செயற் படுவதில்லை. அரசாங்கத்தை நடத்தும் கொள்கைகளைக் காட்டி நான் சர்வதேசத்தை வென்றேன்.
19 ஆவது அரச மைப்புத் திருத்தச் சட்டம் கார ணமாகவே உலகம் என்னு டன் இணைந் தது எனவும் மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.