விவசாய அமைச்சர் ஆகிறார் டக்ளஸ் தேவானந்தா!

புதிதாக இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் இப்போதைய கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை விவசாய அமைச்சினை ஏற்றுக் கொள்ள அரசு உயர்மட்டத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மக்களுக்கு அதிகளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும் என்பதனால் டக்ளஸ் தேவானந்தா இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளதாகவும் அறியமுடிகிறது.

விவசாய அமைச்சுடன் மற்றுமொரு அமைச்சு பதவியும் இவருக்கு தரப்படும் என்றும் இவருக்கு சமிஞ்ஞை காட்டப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சை தொடர்வதற்கு விரும்பவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தி உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எமக்கு தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை மாற்றமானது தைப்பொங்கலை அண்டி நடைபெறும் என நம்புவதாகவும் பிரதமர் பதவியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version