சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது!

டொலர் பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளமையினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(03) தொடக்கம் மீளவும் மூடப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுமார் 6,500 மெற்றிக்டென் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையினால் நவம்பர் 15ம் திகதி தற்காலிமாக மூடப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 22 நாட்களுக்கு பின்  மீளதிறக்கப்பட்டது.

இன்றையதினம் மூடப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மாத இறுதியில் திறக்கப்படுமென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரு தொகுதி மசகு எண்ணெய் இம்மாத இறுதியில் நாட்டுக்கு கிடைக்குமெனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது எனவும் அமைச்சர் உதயகம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version