ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஹூ சத்தம் எழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் அந்த கணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் பெண் ஒருவர், குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்பெண், தனது கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் அனைத்தையும் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், பிரதி செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஜனாதிபதியினை அவமதிப்பது மிகவும் கடுமையான குற்றம் எனவும், எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தின் ஊடாக ஜனாதிபதி வாகனத்தில் பயணம் செய்த போது, பால்மா பக்கெற்றுகளை கொள்வனவு செய்வதற்கென வரிசையில் நின்ற மக்கள், ஹூ சத்தம் எழுப்பி கிண்டல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.