மிகப்பெரிய மாணிக்க கல்லுக்கு 5000ம் கோடி! வேண்ட மறுத்தது இலங்கை!

இலங்கயில் கண்டுபிடிக்கப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய மாணிக்க கல்லுக்கு இலங்கை மதிபில் சுமார் 5000ம் கோடி ரூபாயிற்கு இங்கிலாந்தின் பிரபல மாணிக்கக்கல் ஏல விற்பனை நிறுவனம் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரத்தினபுரியில் 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல் சில மாதங்களுக்கு முன்னர் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

இதனை சீனாவில் இடம்பெறும் ஏலவிற்பனையில் ஏலம் விட உள்ளதாக கூறப்பட்டது.

இந்த கல்லினை இங்கிலாந்தின் பிரபல மாணிக்கக்கல் ஏல விற்பனை நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

இவ்விலையானது இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயாகும். எனினும் இந்த மாணிக்க கல்லின் உரிமையாளரும், மாணிக்கல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையின் பிரதிநிதிகளும் இந்த விலைக்கு  இணங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த மாணிக்ககல்லுக்கு இலங்கை பிரதிநிதிகள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் கிடைத்த 510 கிலோ கிராம் எடை கொண்ட இந்த கல், நீல மாணிக்க கற்களை கொண்ட கொத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version