ஜனாதிபதி வேட்பாளராக சம்பிக்க, தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு  திட்டம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிற்கான பிரசாரப் பணிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்கான முன்னாயத்த வியூகங்களில் எதிரணிகள் களமிறங்கியுள்ளது.

பௌத்த தேரர்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் சம்பிக்கவிற்கு  தனி இடம் உள்ளதால் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சம்பிக்கவினை களமிறக்குவதற்கு எதிர் அணிகள் தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பிக்கவின் 47வது படையணியின் பெயரிலேயே அவர் களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு சம்பிக்க மறுப்பு தெரிவிக்காத நிலையில், கள நிலைமைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக நாடு முழுதும் பயணங்களை இப்பொழுது ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன் ஒரு கட்டமாகவே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், யாழ். நகரில் இந்த அரசையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனும் கருத்துப்பட எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version